மாவட்ட வேலைவாய்ப்பு 2021 | District Recruitment 2021

virudhunagar district recruitment

Outdated Vacancy 

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 | Virudhunagar District Recruitment 2021

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மாவட்ட காசநோய் மையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர், ஆய்வுக்கூட நுட்புநர் பணிக்கு தற்காலிகமாக 11 மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்காக மொத்தம் 7 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 25.10.2021 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விருதுநகர் மாவட்டம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் தேர்வு மூலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் விருதுநகர் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். விருதுநகர் மாவட்டம்  வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள virudhunagar.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்  தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மாவட்ட காசநோய் மையம்
பணிகள் முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர், ஆய்வுக்கூட நுட்புநர்
பணியிடம் விருதுநகர் 
காலியிடம் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021
அதிகாரபூர்வ இணையதளம் virudhunagar.nic.in

பணிகள் மற்றும் காலியிடம்:

பணிகள் காலியிடம் 
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்2
ஆய்வுக்கூட நுட்புநர்5

கல்வி தகுதி:

  • 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் காசநோய் பரிசோதனையில் 1 வருட முன் அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை: 

  • நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

  • துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்), சமுதாய கூடம், F.F ரோடு, மணிநகரம். மாவட்ட காசநோய்  மையம், விருதுநகர்.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. virudhunagar.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தித்தாள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
  3. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் செய்தித்தாள் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்த்த பின்னர் விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் விருதுநகர் மாவட்டம்  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2021