Dark Neck Home Remedies in Tamil
பொதுவாக அனைவருக்குமே தங்களை அழகாக பராமரித்து கொள்வதில் ஆசை இருக்கும். ஆனால் இன்றைய அவசர கால கட்டத்தில் அதற்கான வழிகள் மற்றும் நேரம் தான் அமைந்திருக்காது. அதனால் எளிமையாக தங்களின் அழகை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்கையான வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் நமக்கு மிகுந்த கேடு தான் வந்து சேரும்.
அதனால் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு இயற்கையான அழகு குறிப்பினை பற்றி அறிந்து கொண்டு பயனடைந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் கழுத்தில் உள்ள கருமையை போக்க உதவும் இயற்கை முறையிலான ஒரு அழகு குறிப்பினை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Black Neck Home Remedies in Tamil:
இயற்கை முறையில் கழுத்தில் உள்ள கருமையை போக்க உதவும் ஒரு அழகு குறிப்பினை பற்றி அறிந்து கொள்ளலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் அறிந்து கொள்வோம்.
- எலுமிச்சை பழச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
- தக்காளி – 1
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 தக்காளியை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உள்ள சாற்றினை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் முகம் மட்டுமில்லாமல் உங்கள் உடல் முழுவதும் பொலிவு பெற பாலுடன் இந்த ஒரு பொருளை கலந்து தடவுங்க போதும்
எலுமிச்சை பழச்சாற்றினை கலக்கவும்:
அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
மஞ்சள் தூளினை சேர்க்கவும்:
பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மஞ்சள் தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கடலை மாவினை கலந்து கொள்ளவும்:
இறுதியாக அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவினை கலந்து உங்களின் கழுத்தில் எங்கெல்லாம் கருமையாக உள்ளதோ அங்கெல்லாம் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் கழுத்தில் உள்ள கருமை அனைத்தும் நிரந்தரமாக நீங்குவதை காணலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் சருமம் நன்கு பொலிவு பெற இந்த டிப்ஸ் மட்டும் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |