சந்திர கிரகணத்தன்று என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்ய கூடாது..? என்று தெரியுமா..?

Do's And Don'ts During Lunor Eclipse in Tamil

Do’s And Don’ts During Lunor Eclipse in Tamil

இந்த ஆண்டு முதல் சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி நிகழ உள்ளது. அறிவியல் மற்றும் மதங்களின் கண்ணோட்டத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. ராகு சந்திரனை நேருக்கு நேர் சந்திப்பதை சந்திர கிரகணம் என்று கூறுவார்கள். இப்போது நடைபெற இருக்கும் சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. இது ஒரு வானியல் நிகழ்வாக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தின் படி சந்திர கிரகணம் மிகப்பெரிய புராண மற்றும் ஜோதிட பொருத்தத்தை கொண்டுள்ளது.  கிரகணத்தின் போது சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று இந்து பஞ்சாகத்தில் கூறப்படுகிறது. எனவே சந்திர கிரகணத்தன்று நாம் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்ய கூடாது..! என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

மே 5 இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. இந்த கிரகணத்தை எங்கு எப்படி பார்க்கலாம் முழு விவரம் இதோ..

Dos And Don’ts During Lunar Eclipse in Tamil:

சந்திர கிரகணத்தன்று செய்ய வேண்டியவை:

கிரகணத்தின் போது தியானம் செய்வது நல்லது. மேலும் கடவுளை பிராத்தனை செய்து இறைவழிபாட்டு மந்திரங்கள் கூறலாம்.

இறைவழிபாட்டு மந்திரங்கள் தெரியவில்லை என்றாலும் ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாய, ஓம் சரவண பவ, போன்ற எளிய மந்திரங்களை உச்சரிக்கலாம்.

வீட்டை சுத்தம் செய்து கோமியம், மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீரை வீட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதியில் தெளிப்பது நல்லது.

கிரகணத்தின் போது ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களை தவிர்க்க, உணவு பொருட்களில் துளசி பொருட்களை போடலாம்.

சந்திர கிரகணத்தின் போது செய்ய கூடாதவை:

சந்திர கிரகணத்தன்று கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வயிற்றில் வளரும் குழந்தைக்காக பிராத்தனை செய்ய வேண்டும். மேலும், பிராத்தனை செய்யும் போது, தேங்காய் வைத்து பிராத்தனை செய்ய வேண்டும்.

நோயாளிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தவிர மற்றவர்கள் கிரகணத்தின் பொது முடிந்த அளவிற்கு உணவு பருகாமல் இருப்பது நல்லது.

கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதையும் சந்திர கிரகணத்தை பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

கிரகணத்தின் போது தூங்குவதையோ அல்லது குளிப்பதையோ தவிர்க்க வேண்டும்.

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து எந்தவித உணவுகளையும் உட்கொள்ள கூடாது.

சித்ரா பெளர்ணமி அன்று சந்திர கிரகணம்..  இந்த 5 ராசிக்கு கடும் ஆபத்து..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal