விநாயகரின் அருள் ராசி
விநாயகர் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த கடவுளாக இருக்கிறது. இந்துக்கள் எந்த செயலையும் ஆரம்பிப்பதற்கு முன் விநாயகரை வழிபடுவது வழக்கமான முறையாக இருக்கிறது. இன்றுமே பலரும் புதிதாக எழுதுவதற்கு முன் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். அந்த ஒவ்வொரு கடவுளும் சில ராசிகளுக்கு உரியவகையாக கருதப்படுகிறது. 12 ராசிகளில் சில ராசிகள் மட்டும் விநாயகருக்கு பிடித்த ராசிகளாக உள்ளது. விநாயகருக்கு பிடித்த ராசிகளுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் அதிகரிக்கும். அதனால் இந்த பதிவில் விநாயகருக்கு பிடித்த ராசிகள் யார் யார் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
விநாயகர் அருள் உள்ள ராசிகள்:
மகரம்:
விநாயகருக்கு பிடித்த ராசிகளில் மகர ராசியும் ஒன்று. இந்த ராசிக்காரர்கள் கடுமையாக உழைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் எந்த வேலையை கொடுத்தாலும் நேர்மையாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அது போல ஒரு வேலையை தொடங்கி விட்டால் அதனை முடித்த பின்னர் தான் அடுத்த வேலையை பற்றி சிந்திப்பார்கள். தோல்வியை கண்டு துவண்டு போக மாட்டார்கள். அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். புதன் கிழமையில் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
சனி, ராகு, கேது பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டகாலம் வரப்போகிறது..!
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு விநாயகரின் அருள் முழுமையாக இருக்கிறது. இவர்கள் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எல்லா விதத்திலும் விநாயகர் பக்க பலமாக இருப்பார்கள். படிக்கும் மாணவர்கள் கல்வியில் வெற்றியை அடைவார்கள். நீங்கள் நிறுவனத்தையே எடுத்து நடத்த கூடிய ஆற்றல் காணப்படும். சுருக்கமாக கூறினால் ஆளுமை திறன் காணப்படும். விநாயகரின் யாரும் என்றும் நிலைத்திருக்க புதன்கிழமை சாமந்தி பூக்கள் அல்லது சாமந்தி மலர்களை வைத்து விநாயகரை வழிபட வேண்டும்.
மேஷம்:
விநாயகருக்கு பிடித்த ராசியாக மேஷ ராசி உள்ளது. இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் தொடங்குகின்ற காரியம் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். எவ்வளவு பெரிய கஷ்டமான செயலாக இருந்தாலும் அதனை பொறுமையாகவும், புத்திசாலி தானமாகவும் செய்து முடிப்பார்கள். வாழ்க்கையால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க கூடியவர்களாக இருப்பார்கள். புதன் கிழமையில் விநாயகருக்கு உரிய மந்திரங்களை கூறி விநாயகரை வழிபட வேண்டும்.
கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |