சூரியன் புதன் சேர்க்கை பலன் – Suriyan Budhan Serkai in Tamil
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மாற்றமும் ஒவ்வொரு அதிபதியும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் ஜூன் 7 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைகிறார். ரிஷப ராசியில் சூரியன் பயணித்து வருகிறார். இதனால் அந்த ராசிக்கார்களுக்கு புதாதித்ய ராஜயோகம் உருவாகும். அனைத்து யோகங்களில் இந்த புதாதித்ய ராஜயோகம் முக்கியமானது. ஆகவே இந்த யோகமானது மற்ற ராசிக்கு என்ன பலன்களை அளிக்க போகிறார் என்று பார்க்கலாம் வாங்க..!
சூரியன் புதன் சேர்க்கை பலன்
கடக ராசி | Cancer Zodiac in Tamil
கடக ராசியில் சூரியன் புதன் சேர்க்கையால் 11 ஆம் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகுகிறது. அதனால் கடக ராசிக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். சொத்துக்கள் வழியில் நன்மைகள் கிடைக்கும். இந்த காலத்தில் நிலம் சார்ந்த வகையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். பணி புரிபவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல முன்னேற்றம் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். அதேபோல் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரையில் எந்த குறைபாடும் இருக்காது.
சிம்ம ராசி | Leo Zodiac in Tamil
10 ஆம் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் வியாபாரிகளுக்கு இந்த காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அலுவலகத்தில் நல்ல நன்மதிப்பை பெறுவார்கள். அதேபோல் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
ரிஷப ராசி | Taurus Rasi in Tamil
ரிஷப ராசியின் 1 ஆம் வீட்டில் தான் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் நிதி நிலையில் நல்ல மாற்றம் இருக்கும். அதிர்ஷ்டங்கள் அனைத்தும் உங்கள் பக்கம் நிற்கும். ஆகவே உங்களுக்கு இந்த காலத்தில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார். திருமணம் ஆகியவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள்.
புதன் ரிஷபத்தில் அமர்வதால் ஜூன் 7 முதல் கொட்டோகொட்டுனு கொட்டப்போகிறது யாருக்கு தெரியுமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |