உளுத்தம் பருப்பில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..!|Urad dal benifits in tamil

ulunthu benefits in tamil

உளுத்தம் பருப்பின் நன்மைகள்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது உளுத்தம் பருப்பின் நன்மைகள் பற்றித்தான். நாம் தினமும் ஏதோ ஒருவகையில் உளுத்தம் பருப்பை சாப்பிட்டு வருகின்றோம் பொதுவாக இட்லி, தோசை, உளுத்தம் பருப்பு வடை போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றோம். அப்படிப்பட்ட இந்த உளுத்தம் பருப்பை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றித்தான் பார்க்கப்போகின்றோம். 

இதையும் படியுங்கள் =>அடிவயிற்றில் உள்ள தொப்பை குறைய இதை செய்து பாருங்கள்..!

உளுந்தின் நன்மைகள்:

முதலில் உளுத்தம் பருப்பில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி பார்ப்போம். இதில் அதிக அளவு புரதம் உள்ளது அதாவது 100 கிராம் உளுத்தம் பருப்பில் 25 கிராம் அளவிற்கு புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னிசியம், வைட்டமின் B6, காப்பர், அதிக அளவு நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளன. இந்த உளுத்தம் பருப்பை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

  • முதலில் நம்மில் சிலருக்கு தொடர்ந்து தோள்பட்டை வலி, முதுகு வலி, மூட்டு வலி இருக்கும் அதற்கு உளுத்தம் பருப்பை அதிக அளவிற்கு உணவில் சேர்த்து கொண்டால் அந்த வலிகள் எல்லாம் குறையும் வாய்ப்புள்ளது.
  • அடுத்து நம்மில் சிலருக்கு எலும்புக்குறை மற்றும் எலும்புருக்கி நோய் Osteoporosis என்று கூறப்படுகின்ற நோய் இருக்கும் அதாவது எலும்பின் அடர்த்தி குறைவதால் எலும்புகளில் வலி ஏற்படும். இப்படிப்பட்ட நோய் உள்ள இவர்களால் எந்தவித வேலைகளையும் சரியாக செய்ய முடியாது இந்த நோய் இருக்கும் நபர்கள் தினமும் உளுத்தம் பருப்பை சாப்பிட்டு வருவதால் கால்சியம் சத்து அதிகமாக கிடைத்து எலும்புகள் எல்லாம் வலிமைப் பெற்று இந்த நோய்களிலிருந்து விடுப்படுவார்கள்.
  • முடியின் வளர்ச்சி குறைவது மற்றும் முடி அதிக அளவு உதிருகிறது என்பவர்கள் இந்த உளுத்தம் பருப்பை தினமும் பயன்படுத்துவதால் முடி உதிர்வை குறைக்கும். ஏன்யென்றால் நான் முன்பு கூறியது போல் உளுத்தம் பருப்பில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைத்துள்ளது என்பதால் முடி உதிர்வை தடுத்து அதிக அளவு முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த உளுத்தம் பருப்பை அரைத்து தலை முடியின் மீது தடவி வருவதாலும் சரி அதனை உணவாக உள்ளுக்குள் சாப்பிட்டாலும் சரி முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
  • செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த உளுத்தம் பருப்பை சாப்பிடுவதால் சீரான செரிமானத்திற்கு வழிவகுக்கும். மேலும் இந்த உளுத்தம் பருப்பில் உள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கல் மற்றும் குடல் சமந்தாப்பட்ட பிரச்சனைகளை தடுக்கும்.
  • அடுத்து பார்த்தீர்கள் என்றால் இந்த உளுத்தம் பருப்பிற்கு உடலிற்கு நல்ல வலிமையை தரும் சத்து உள்ளது. மேலும் இதில் உள்ள அதிக அளவு புரதச்சத்து மற்றும் கால்சியம் சத்து உடலில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்பெற உதவும். முக்கியமாக குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இந்த உளுத்தம் பருப்பு மிகவும் உதவுகிறது. மேலும் சிலர் பார்ப்பதற்கு மிகவும் மெலிந்து காணப்படுவார்கள் அவர்கள் எல்லாம் இந்த உளுத்தம் பருப்பை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை சீராக அதிகரிக்கும்.
  • சர்க்கரை நோய்யாளிகளுக்கு இந்த உளுத்தம் பருப்பு மிகவும் நல்லது என்னயென்றால் சர்க்கரை நோய்யாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம் இப்படிப்பட்டவார்கள் உளுத்தங்கலியை அடிக்கடி சாப்பிட்டு வந்தார்கள் என்றால் உளுத்தம் பருப்பில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கும் மேலும் அவர்களுக்கு இன்சுலின் சுரக்குவதை சீராக்கும்.
  • இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இந்த உளுத்தம் பருப்பு மிகவும் உதவுகின்றது அதாவது உளுத்தம் பருப்பில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் இது உங்களின் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இரத்த நாலாங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அவைகள் சீராக சுருங்கி விரிய உதவுகின்றது.
  • உளுத்தம் பருப்பை சாப்பிடுவதால் உடலின் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
  • நம்மில் பலருக்கும் இடுப்பு எலும்பில் வலிமை இல்லாததால் வலி ஏற்படும் அப்படிப்பட்டவர்கள் கருப்பு உளுத்தம் பருப்பில் கலி செய்து சாப்பிடுவதால் இந்த வலில்லிருந்து விடுப்பெறலாம்.
  • ஆண்களின் மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைபாடு போன்ற பிரச்சனைகளை போக்கி விந்துஅணுக்களின் சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த உளுத்தம் பருப்பிற்கு உண்டு. 

இதையும் படியுங்கள் => நாயுருவி செடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்