தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி பட்டியல் | List of Government Engineering Colleges in Tamilnadu in Tamil

list of government engineering colleges in tamilnadu in tamil

தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள்

நண்பர்களே வணக்கம் 12 வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு என்ன படிக்க வேண்டும் என்று யோசித்து முடிவு செய்து வைத்திருப்பீர்கள் அதில் மாணவர்களுக்கு அதிகம் கவனத்தில் இருப்பது பொறியியல் படிப்பைத்தான் தேர்வு செய்து இருப்பார்கள். அதிகளவு மாணவர்கள் படிக்க ஆசைபட்டாலும் கொஞ்சம் மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த ஆசை நிறைவேறுகிறது. காரணம் அனைத்து மாணவர்களுக்கும் சீட்டு கிடைப்பதில். இன்னும் சிலர் அரசு கல்லூரியை நாடுவார்கள் அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே சீட்டு கிடைக்கும் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சிட்டு கிடைப்பதில். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி எத்தனை உள்ளது என்பதை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் Arts and Science College Tamil nadu

தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி பட்டியல்:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்ற ஊரில் அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் என்ற இடத்தில் அரசினர் பொறியியற் கல்லூரி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் என்ற ஊரில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி என்ற ஊரில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது இது தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1982 ஆகும்.

கோயம்புத்தூரில் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது இந்த கல்லூரி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1945 ஆம் ஆண்டு ஆகும்.

ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாகேயம் என்ற ஊரில் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவன கல்லூரி உள்ளது இந்த கல்லூரி தொடங்கப்பட்டது 1990 ஆம் ஆண்டு ஆகும்.

அரசு பொறியியல் கல்லூரி தஞ்சாவூர் இந்த கல்லூரியானது 2012 ஆண்டு தொடங்கப்பட்டது.

தருமபுரியில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது இந்த கல்லூரி 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் என்னும் ஊரில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது இந்த கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டானது 2012 ஆம் ஆண்டு உள்ளது.

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு 2013 ஆம் ஆண்டு ஆகும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil