Mox cv 625 Uses in Tamil
உடல்நல குறைபாடு ஏற்பட்டால் எடுத்து கொள்ளும் மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தானாக மருந்து கடைக்கு சென்று வாங்கி சாப்பிட கூடாது. ஏனென்றால் நீங்கள் தானாக மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடும் போது உங்களின் உடல்நிலைக்கு ஏற்ற அளவுகளை தர மாட்டார்கள். அதுவே நீங்கள் மருத்துவரிடம் காண்பித்து அவரின் ஆலோசனையில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடும் போது நம்முடைய உடல்நிலைக்கு ஏற்ற மருந்துகளைவழங்குவார்கள் . இதனால் பக்க விளைவுகள் குறைவாக ஏற்படும்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!
Mox cv 625 Uses in Tamil:
இந்த மாத்திரையானது சைனஸ் தொற்று, சுவாசக்குழாய் தொற்றுகள், சிறுநீர் பாதை தொற்று, எலும்பு மற்றும் மூட்டு தொற்று, மூச்சு குழாய் அலர்ஜி, தொண்டை நோய் தொற்று போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
பக்க விளைவுகள்:
- வாந்தி
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- வயிறு கோளறு
- தோல் தடிப்புகள்
- எரிச்சல்
- தலைவலி
- மயக்கம்
மருள் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஒரு வேளை மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வெறும் ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.
Compound Benzoic Acid ஆயிண்ட்மென்ட் எதற்காக பயன்படுகிறது.
முன்னெச்சரிக்கை:
கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த மாத்திரை எடுத்து கொள்வதால் குழந்தைக்கு பக்க விழாவை ஏற்படுத்தும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த மாத்திரையானது குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மயக்க பிரச்சனையை ஏற்படுத்தும், அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலை தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
நீங்கள் Mox cv 625 மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |