இப்படி ஒரு காரை பார்த்தா வாங்காம இருக்க முடியுமா.?

Advertisement

Skoda Kushaq Elegance Edition Price in Tamil

பொதுவாக பெரும்பாலனவர்கள் சொந்தமாக காரை வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால் பழைய கார்கள் கம்மி விலையில் இருப்பதால் அதை வாங்கி கொள்கின்றனர். இருந்தாலும் இந்த கார் ஆனது ரொம்ப நாளைக்கு நாம் பயன்படுத்த முடியாது. சீக்கிரமே பழுதடைந்து விடும், இல்லையயன்றால் அடிக்கடி ரிப்பேர் ஆகி கொண்டே  இருக்கும். அதனால் நீங்கள் மொத்தமாக முதலீடை போட்டு ஒரு முறை நீங்கள் காரை வாங்கினாலும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம். அந்த வகையில் நீங்கள் புதிய கார் என்ன வாங்குவது என்று யோசித்து கொண்டிருந்தால் நம் பதிவில் தினந்தோறும் காரை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான காரை பற்றி அறிந்தது கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஸ்கோடா கார்பற்றிய தகவல்:

ஸ்கோடா கார்பற்றிய தகவல்

இந்த கார் முழுவதும் கருப்பு நிறத்தில் உள்ளது. குஷாக்கின் எலிகன்ஸ் எடிஷன், முன் கிரில் மற்றும் பாடி சைட் மோல்டிங்கில் குரோம் ட்ரீட்மென்ட், பி-பில்லரில் ‘எலிகன்ஸ்’ பேட்ஜ் மற்றும் 17-இன்ச் டூயல் போன்ற அம்சத்துடன் வருகிறது.

காரின் உள்பகுதியில் சீட் பெல்ட் கவர்கள், நெக் ரெஸ்ட்கள், மெத்தைகள் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றில் எலிகன்ஸ் பிராண்டிங் இடம் பெற்றுள்ளது.

ஸ்கோடா குஷாக்கின் எலிகன்ஸ் எடிஷன் டாப்-ஸ்பெக் ஸ்டைல் ​​வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதால் , இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, காற்றோட்டம் மற்றும் இயங்கும் முன்பக்க அம்சங்களுடன் வருகிறது.

6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

இஞ்சின்:

எலிகன்ஸ் பதிப்பு 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் (150 PS / 250Nm), 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் (DCT) பொருத்தப்பட்டுள்ளது.  6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்ட 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ளது.

விலை:

இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையாக 18.31  லட்சம் முதல் 19.51 லட்சம் வரைக்கும் இருக்கலாம்.

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 

Advertisement