Car வச்சிருக்கவங்க இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்..!

Advertisement

Car Insurance Claim Rules in Tamil

பொதுவாக அனைவருக்குமே சில கனவுகள் மற்றும் ஆசைகள் இருக்கும் அப்படி உள்ள ஒரு சில கனவுகள் மற்றும் ஆசைகளில் ஒன்றாக  இடம் பெற்றிருப்பது கார் வாங்க வேண்டும் என்பது தான். அப்படி உங்களுக்கும் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது.

அப்படி நாம் மிகவும் ஆசைப்பட்டு நாம் வாங்க போகும் காரினை மிகவும் பாதுக்காக்க உதவும் ஒரு வழிமுறை தான் காருக்கு காப்பீடு செய்து வைத்து கொள்வது முக்கியமான ஒன்று ஆகும். அப்படி நாம் நமது காருக்கான செய்து வைத்துள்ள காப்பீட்டினை நாம் Claim செய்யும் பொழுது சில காரணங்களால் நிராகரிப்பு செய்யப்படும் அவை என்னென்ன கரணங்கள் என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Car Insurance Claim Rejection Reasons in Tamil:

Car Insurance Claim Rejection Reasons in Tamil

பொதுவாக இந்த உலகில் எப்போ என்ன நடக்கும் என்று தெரியாது அதேபோல் தான் நாம் காரில் செல்லும் பொழுது நமது கார் ஒரு விபத்தில் சிக்கி கொள்கிறது என்றால் அதனை பாதுகாப்பதற்காக நாம் முன்னெச்செரிக்கையாக நாம் நமது காருக்கு காப்பீடு செய்துகொள்வது மிகவும் நல்லது.

அப்படி நாம் செய்துள்ள காப்பீட்டினை நாம் Claim செய்யும் சூழல் ஏற்படும் பொழுது சில சில காரணங்களால் நிராகரிப்பு செய்யப்படும் அவை என்னென்ன கரணங்கள் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

  • க்ளைம் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டால் நிராகரிப்பு செய்யப்படும். அதாவது ஒவ்வொரு மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனமும் குறிப்பிட்ட காலக்கெடுவைக் கொண்டுள்ளது, அதற்குள் பாலிசிதாரர் கார் காப்பீட்டுக் கோரிக்கையை உயர்த்த வேண்டும் இல்லையென்றால் உங்களது கோரிக்கை நிராகரிப்பு செய்யப்படும்.

 

  • மோசடியான உரிமைகோரல்கள் எழுப்பப்பட்டால் நிராகரிப்பு செய்யப்படும். அதாவது ஒரு நபர் தனது சொந்த பயன்பாட்டிற்க்கான காரில் வெள்ளைநிற நம்பர் போர்டை பயன்படுத்த வேண்டும். அப்படி தங்களது சொந்த பயன்பாட்டிற்கு உள்ள காரினை ஏதாவது ஒரு வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் பொழுது அதில் மஞ்சள் நிற நம்பர் போர்டை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாறாக நீங்கள் வெள்ளைநிற நம்பர் போர்டை பயன்படுத்தி கொண்டே வர்த்தகத்திற்காக அந்த காரினை பயன்படுத்துவது தவறு இதனால் கூட உங்களுது காப்பீடு நிராகரிக்கப்படும்.

இனிமேல் கார் வாங்க ஒரு ரூபாய் கூட முன்பணம் செலுத்த தேவையில்லை

  • நீங்கள் குடிபோதையில் உங்கள் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டாலும் உங்களுது காப்பீடு நிராகரிக்கப்படும்.

 

  • சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினாலும் காப்பீடு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

  • நீங்கள் கொள்கை விதிமுறைகள் & நிபந்தனைகளை மீறினால் உங்களுது காப்பீடு நிராகரிக்கப்படும்.

 

  • நீங்கள் ஓட்டும் காரின் உரிமையாளர் நீங்கள் இல்லையென்றால் காப்பீடு நிராகரிக்கப்படும். அதாவது கார் உரிமையாளரும் கார் காப்பீட்டின் பாலிசிதாரரும் ஒரே நபராக இருக்க வேண்டும். ஒரு தனிநபர் தங்களுக்குச் சொந்தமில்லாத காருக்கான காப்பீட்டுக் கோரிக்கையை உயர்த்த முடியாது.

மேலே கூறப்பட்டுள்ள சில காரணங்களால் தான் கார் காப்பீடு நிராகரிக்கப்பு செய்யப்படும்.

Rental Agreement-ஆ ஏன் 11 மாசத்துக்கு மட்டும் போடுறாங்க தெரியுமா

 

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 
Advertisement