வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இனிமேல் கார் வாங்க ஒரு ரூபாய் கூட முன்பணம் செலுத்த தேவையில்லை..!

Updated On: January 5, 2024 5:00 PM
Follow Us:
Maruti Car Subscription Details in Tamil
---Advertisement---
Advertisement

Maruti Car Subscription Details in Tamil

நாம் அனைவருக்குமே உள்ள பல ஆசைகளில் ஒரு பொதுவான ஆசையென்றால் அது தனக்கென்று சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது தான். அதிலும் குறிப்பாக நடுத்தர மக்களுக்கு தங்களின் பட்ஜெட்டில் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் தான் நடுத்தர மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக தான் Maruti நிறுவனம் ஒரு சப்ஸ்கிரிப்ஷன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதனால் இன்றைய பதிவில் இந்த Maruti நிறுவனத்தின் சப்ஸ்கிரிப்ஷன் முறை மற்றும் இந்த சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கார் வாங்கினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Maruti Car Subscription Information in Tamil:

Maruti Car Subscription Information in Tamil

அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் முதன் முதலாக மாருதி நிறுவனம் தங்களது சப்ஸ்கிரிப்ஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இந்த சப்ஸ்கிரிப்ஷன் மாடல் என்றால் ஒரு நபர் வழக்கமாக கார் வாங்கும் போது காருக்கான பணம், அதற்கான பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் இப்படியான பணம் எதுவும் செலுத்தாமல் மாதாந்திரமாக குறிப்பிட்ட தொகையை அந்தநிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் அந்த காரை தனது சொந்த கார் போல பயன்படுத்தலாம்.

ஆனால் இது ஒரு சில குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மட்டும் தான். அதன் பிறகு காரினை ரிட்டன் செய்துவிட வேண்டும். இந்த முறையில் நாம் ஒரு காரை பயன்படுத்தும் பொழுது நாம் செலுத்தும் மாதாந்திர கட்டணம் போக பெட்ரோலுக்கான செலவும் செய்ய வேண்டும் மற்றபடி எந்த ஒரு தொகையும் செலுத்த தேவை இல்லை.

அதேபோல் காரின் பராமரிப்பு மற்றும் கார்ரிப்பேர் ஆனால் அதை சரி செய்வதற்கான செலவு அனைத்தையும் கார் தயாரிப்பு நிறுவனமே பார்த்துகொள்ளும். மேலும் காருக்கான பதிவுகட்டணம் இன்சூரன்ஸ் உள்ளிட்ட விஷயங்களும் கார்தயாரிப்பு நிறுவனமே செய்து கொள்ளும்.

இப்படியான ஒரு முறை இருப்பதே பலருக்கும் தெரியாத நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறையில் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் கார் வாங்கி கொண்டிருக்கின்றார்கள்.

வெறித்தனமான விலையில் பற்பல அமசங்களுடன் கிடைக்கும் Hyundai நிறுவனத்தின் கார்

எவ்வளோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது:

மாருதி நிறுவனம் 2020 ஆம் ஆண்டு இந்த முறையை அறிமுகம் செய்து இருந்தாலும் அந்த ஆண்டு அவர்கள் வெறும் 83 கார்களையே சப்ஸ்கிரைப் முறையில் விற்று இருந்தார்கள். ஆனால் 2021 ஆம் ஆண்டு இது மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கி 2021-22 நிதியாண்டில்  மொத்தம் 1000 கார்களையும், 2022-23 நிதியாண்டில்  மொத்தம் 6921 கார்களையும்.

மொத்தமாக மாருதி நிறுவனம் இந்த சப்ஸ்கிரைப் முறையில் 8000 கார்களை கொடுத்துள்ளார்கள். இதில் 32 சதவீதமான மக்கள் 3 ஆண்டுகள் வரை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் எங்கள் கார்களை வாங்கி உள்ளனர்.

அதேபோல் 33 சதவீதமான மக்கள் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் என்ற முறையில் வாங்கி உள்ளனர். 15% 5 ஆண்டுகள் என்ற முறையில் வாங்கி உள்ளனர். 15% மக்கள் தான் 5 ஆண்டுகள் என்ற முறையில் வாங்கி உள்ளனர்.

வெறும் 3 சதவீத மக்கள் தான் 12 மாத சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாங்கி உள்ளனர். அதிகமாக 3 மற்றும் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் பிளானை பண்ணி தான் மக்கள் விரும்புகின்றனர்.

மாருதி நிறுவனத்திடம் தற்போது ஆண்டுக்கு 10,000, 15,000, 20,000 மற்றும் 25,000 கிலோ மீட்டர் ஆகிய ஸ்லப்புகளில் சப்ஸ்கிரைப் மாடல்கள் உள்ளன. அதிகமான கிலோ மீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் அதிகமாக செலவாகும். குறைவான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் குறைவாக செலவாகும்.

பட்ஜெட் விலையில் வெறித்தனமான அம்சங்களுடன் வரப்போகும் Hyundai நிறுவனத்தின் கார்

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Why tyre burst while driving in tamil

கார் டயர்கள் வெடிப்பதற்கு காரணம்

What is The Recirculation Button in a Car in Tamil

காரில் ஏசியை போட்டதும் இந்த பட்டனையும் ஆன் பண்ணனுமாம்..! இது உங்களுக்கு தெரியுமா..?

வெறித்தனமான விலையில் பற்பல அமசங்களுடன் கிடைக்கும் Hyundai நிறுவனத்தின் கார்..!

Top 5 New Launch Car 2024 India in Tamil

2024-ல் வெளிவரவுள்ள Top-5 கார்கள் என்னென்ன தெரியுமா..?

Vehicle Modification Rules in India in Tamil

காரில் சிறிதாக மாற்றம் செய்வதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க..!

இந்திவாவின் மலிவான EV Car, TATA Tigor இப்போது புதிய பொலிவுடன்….

Car வச்சிருக்கவங்க இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்..!

பட்ஜெட் விலையில் வெறித்தனமான அம்சங்களுடன் வரப்போகும் Hyundai நிறுவனத்தின் கார்..!

Top 10 EV Cars in India 2023 List in Tamil

இந்தியாவின் முதல் 10 EV கார்களின் பட்டியல் மற்றும் அவற்றின் சிறப்புகள் இதோ..