கார் டயர்கள் வெடிப்பதற்கு காரணம்
சைக்கிள் டயர் வெடித்தது என்றால் நம்மால் பேலன்ஸ் செய்ய முடியும், அதுமட்டுமில்லாமல் அவை எதனால் வெடித்தது என்று நம்மால் அறிந்து கொள்ள முடியும். அதுவே வண்டி மற்றும் காரில் டயர் வெடித்தது என்றால் பேலன்ஸ் செய்ய முடியாமல் விபத்து ஏற்படும். அதற்கு நீங்கள் கார் டயர்கள் எதனால் வெடிக்கிறது என்று அறிந்து கொண்டால் விபத்திலிருந்து தப்பிக்க முடியும். இந்த பதிவில் கார் டயர் வெடிப்பதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
டயர் காற்று:
காரில் இருக்கும் டயர் வெடிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது காற்று தான், இந்த காற்றானது சரியான அளவில் இருப்பது அவசியமானது. டயர்களில் அதிக காற்று இருப்பதை விட குறைவான காற்று இருப்பது தான் டயர் வெடிப்பதற்கு காரணமாக இருக்கிறது. அதிலும் கோடைகாலத்தில் தான் குறைவாக உள்ள டயர்களில் வெப்பம் மற்றும் அழுத்தம் அதிகரிப்பதால் டயர் வெடிக்கிறது.
காற்றழுத்தம் என்பது டயரில் உள்ள காற்றைக் குறிக்கிறது. இந்த காற்றழுத்தம் ஆனது காரின் மாடல் பொறுத்து மாறுபடும். எப்போதும் காரின் Manualல் பரிந்துரைக்கப்பட்ட குறியீட்டு அளவை பின் பற்றுவதே மிகவும் சரியானது.
பெரும்பாலான கார்களின் டயர்களில் காற்றழுத்தம் 30 முதல் 35PSI ஆக இருக்க வேண்டும். ஆனால் பலரும் PSI குறியீட்டு அளவை விட அதிகமான காற்றை டயர்களில் நிரப்புகிறார்கள். இவ்வாறு குறியீட்டு அளவைவிட அதிகமாக நிரப்புவது உயிருக்கு ஆபத்து தரக்கூடியதாகும். காற்று நிரப்புவதில்கவனமாக இருக்க வேண்டும்.
காரில் செல்லும் போது வாந்தி வர காரணம்
ஓய்வு:
நீங்கள் காரை நீண்ட பயணத்திற்கு ஓட்டுகிறர்கள் என்றால் ஓய்வெடுக்க வேண்டும். ஏனென்றால் நீண்ட தூரத்திற்கு தொடர்ப்பித்து ஓட்டி கோட்னி இருப்பதால் டயர் ஆனது சூடாகிவிடும். இதனாலும் டயர் வெடித்து விடும். அதனால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடம் பிரேக் எடுத்து கொள்வது நல்லது.
கார் டயரின் ஆயுட்காலம் 4 வருடம் முதல் 6 வருடங்கள் கொடுக்கப்டுகிறது. ஆனால் இதில் நீங்கள் இந்த வருடத்திற்குள் காரின் டயர் ஆனது அதிகமாக ஓட வில்லை, அல்லது என்னுடைய டயர் புதிதாகவே இருக்கிறது என்று மாற்றாமல் இருக்க கூடாது. 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு மேல் டயர்களை மாற்றவது நல்லது.
வண்டில பிரேக் பிடிக்கலைன்னா என்ன பண்றது..
டயர்களில் விரிசல்:
நீங்கள் காரை ஓட்டுவதற்கு முன்னால் டயரை கண்காணிக்க வேண்டும். டயரில்வீக்கம், விரிசல் போன்றவை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி ஏதும் இருந்தால் அதனை சரி செய்து விட்டு காரில் பயணம் செய்ய வேண்டும்.
அடுத்து காரில் பயணம் மேற்கொள்வதற்கு முன்னால் டயர்களில் காற்றை சரிபார்த்து விட்டு பயணிப்பது சிறந்தது.
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |