Why do i Vomit While Travelling in Car in Tamil
கார் அல்லது பேருந்து, வேன் போன்றவற்றில் சென்றால் பலருக்கும் வாந்தி பிரச்சனை ஏற்படும். இதனாலேயே பலரும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்க மாட்டார்கள். அப்படியே சில சூழ்நிலைகளில் பயணித்தாலும் கையில் பல ரெமிடிகளை வைத்திருப்பார்கள். இவை எதனால் இப்படி வாந்தி வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்த பதிவில் வாந்தி எதனால் வருகிறது என்று அறிந்து கொள்வோம்.
வாந்தி வர காரணம்:
காரில் செல்லும் போது வாந்தி வருவது போல இருப்பதற்கு முக்கிய காரணம் நம் மூளை தான். நாம் மூளைக்கு நம்மில் உள்ள சில பாகங்கள் நாம் பயணிப்பதாகத் தகவல்களை அனுப்பும் அதே நேரம் சில பாகங்கள் நாம் பயணிக்கவில்லை என்ற தகவலை அனுப்பும் இது தான் இதற்கு முக்கியமான காரணம். எடுத்துக்காட்டாக நாம் வாகனத்தில் பயணிக்கும் போது ஜன்னல் வழியாகப் பார்க்கும் விஷயங்கள் பயணிப்பதை உணர்த்தும், நாம் கேட்கும் விஷயங்கள் நாம் பயணிப்பதாக மூளைக்குத் தகவல்களை அனுப்பும், ஆனால் நம்மில் உடல் நாம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதாகத் தகவல்களை அனுப்பும். இப்படி இரண்டு விதமான தகவல்களை செய்ய முடியாமல் தவிப்பதனால் தான் வாந்தி ஏற்படுகிறது.
மற்றொரு காரணமாக காரை வளைத்து வளைத்து ஓட்டுவதால் வாந்தி வருவது போல உணர்வும், வாந்தியும் ஏற்படும். அதுவே நீங்கள் நேராக ஓட்டினால் வாந்தி வராது. அதனால் கார்களை நேராக ஓட்ட முயற்சியுங்கள் .
பயணம் செய்யும் போது வாந்தி எடுப்பவர்களுக்கு இதை கொடுத்தால் போதும் வாந்தி வராமல் தடுக்கலாம்..!
வாந்தி வராமல் பயணம் செய்ய:
நீங்கள் காரிலோ அல்லது நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது முன் பக்க சீட்டை தேர்வு செய்து உட்காருவது நல்லது. இப்படி முன்பக்க சீட்டில் அமர்ந்து செல்வது வாந்தி பிரச்சனையை தவிர்க்கும்.
அடுத்து சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும், அதற்கு நீங்கள் வாகனங்களின் ஜன்னல்களை திறந்து வைத்து கொண்டு சென்றால் வாந்தி நிலையை தவிர்க்கலாம்.
வாகனங்களில் செல்லும் போது புத்தகம் படிப்பதை தவிர்த்து விட வேண்டும், நீங்கள் இது போல ஒரே இடத்தில் பார்த்து கொண்டே இருப்பதால் வாந்தி நிலை ஏற்படும். அதனால் உங்களின் பார்வையை தொலை தூரத்தில் வையுங்கள், ரோட்டின் முன்பக்கம் பார்த்தவாறு அமர்ந்து உட்காருங்கள்.
காரில் பயணித்து கொண்டே இருந்தாலும் வாந்தி ஏற்படும், அதனால் அவ்வப்போது பிரேக் எடுத்து காரிலிருந்து வெளியே வந்து காற்றை சுவாசித்து விட்டு அதன் பிறகு காரில் செல்லலாம்.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |