ஏன் இந்திய ரயில்கள் நீல நிறத்தில் இருக்கின்றன தெரியுமா..?

Advertisement

Do You Know Why Indian Trains Are Blue in Colour in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே ரயிலில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். காரணம் ரயில் பயணம் என்பது அவ்வளவு சுவாரஸ்யமானதாக இருக்கும். அழுங்கள் குலுங்கள் இல்லாமல் பயணிக்கும் பயணம் தான் ரயில் பயணம். இப்படி நமக்கு பல விதங்களில் உதவும் ரயிலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நிறைய இருக்கின்றன.

அதாவது ரயிலில் சில குறியீடுகள், எழுத்துக்கள் என்று எல்லாமே நமக்கு புதிராகவே தான் இருக்கும். அப்படி இருக்கும் தகவல்களை நாம் நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் இந்தியாவில் ஓடும் பெரும்பாலான ரயில்கள் ஏன் நீல நிறத்தில் இருக்கின்றன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

ரயில் தண்டவாளத்தில் ஏன் கற்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா

இந்தியாவில் ஓடும் ரயில்கள் ஏன் நீல நிறத்தில் இருக்கின்றன..? 

இந்தியாவில் ஓடும் ரயில்கள் ஏன் நீல நிறத்தில் இருக்கின்றன

பொதுவாக நம் இந்திய நாட்டில் பல ரயில்கள் ஓடுகின்றன. அதில் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றன. சில ரயில்கள் வேண்டுமானால், சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான ரயில்கள் நீல நிறத்தில் தான் செல்கின்றன.

சரி நீங்களும் ரயிலில் பயணம் செய்திருப்பீர்கள். அப்படி பயணம் செய்யும் போது இந்த கேள்வி உங்களுக்கு தோன்றிருக்கிறதா..? அப்படி உங்களுக்கும் கேள்வி இருந்தால் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ரயில் தண்டவாளங்களில் இடைவெளி இருக்க காரணம் என்ன தெரியுமா

பொதுவாக 1996 ஆம் ஆண்டுகளில் இருந்த ரயில்கள் எல்லாம் ஒரு ரெட்டிஷ் Reddish (துரு பிடிச்ச) கலரில் தான் இருந்தது. அதன் பிறகு, ரயில் எல்லாவற்றிலும் வேக்கம் பிரேக் (Vaccum Break) பொருத்தினார்கள்.

அதிலும் கொஞ்சம் நாட்கள் கழித்து புதிதாக ஒரு Breaking System பொருத்தினார்கள். அதன் பெயர் தான் Air Breaking System. இந்த Breaking System வந்ததில் இருந்து நம் இந்தியாவில் ஓடும் எல்லா ரயில்களிலும் இதையே பொறுத்தினார்கள்.

இப்படி Air Breaking System பொருத்தும் ரயில்கள் எல்லாவற்றையும் நீல நிறத்தில் மாற்றினார்கள். அதாவது Air Breaking System பொருத்திய ரயில் எது என்று வித்தியாசம்  தெரிவதற்காக தான் நீல நிறத்தில் வண்ணம் பூசினார்கள்.

இந்த நீல நிறம் அப்போது இருந்த ரயில்வே மந்திரியால் தேர்வு செய்யபட்டது என்று RTI தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சொல்லப்பட்டது.

இதன் காரணமாக தான் இந்தியாவில் ஓடும் பெரும்பாலான ரயில்கள் நீல நிறத்தில் இருக்கின்றன.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement