Reason For The Gap in The Railway Tracks
வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் கூறப்போகிறேன். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும். பொதுவாக நம் அனைவருக்குமே ரயிலில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். காரணம் ரயிலில் கூட்டம் இருக்காது. அதுமட்டுமில்லாமல் ரயிலில் இருக்கும் வசதி பேருந்தில் கூட கிடைக்காது. சரி இது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக ரயில் தண்டவாளங்களில் இடைவெளி இருக்க காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ரயிலில் பயணம் செய்யும் போது தண்டவாளத்தின் பக்கத்தில் ஏன் இந்த பெட்டி இருக்குனு தெரியுமா |
ரயில் தண்டவாளங்களில் இடைவெளி ஏன் இருக்கிறது..?
உங்களுக்கு ரயில் தண்டவாளத்தில் நடக்க பிடிக்குமா..? பொதுவாக நம்மில் பலருக்கும் ரயிலில் பயணம் செய்வதை விட ரயில் தண்டவாளத்தில் நடப்பதற்கு பிடிக்கும். நீங்கள் ரயில் தண்டவாளத்தில் நடந்து இருக்கிறீர்களா..? அப்படி நடந்து சென்றிருந்தால் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டுமே.
அது என்னவென்றால் ரயில் தண்டவாளத்திற்கு இடையில் இடைவெளி இருக்கும். அதாவது தண்டவாளத்திற்கு இடையில் ஒரு கோடு போன்ற இடைவெளி இருக்கும் அல்லவா..! அது எதற்கு என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.
ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா |
பெரும்பாலும் தண்டவாளங்கள் அனைத்தும் இரும்பை உள்ளடக்கிய உலோக கலவையால் செய்யப்பட்டவை ஆகும். அதனால் அவை வெப்பத்தை கடத்தும் திறனை கொண்டுள்ளது.
கோடை காலங்களில் இரும்பு வெப்பமடைந்து விரிவடைகிறது. அப்படி விரிவடையும் போது, தண்டவாளத்தின் நீளம் அதிகரிக்கும். அந்த நேரத்தில் தண்டவாளத்தின் இடையே உள்ள இடைவெளி, இரும்பு விரிவடைவதால் ஏற்படும் கூடுதல் நீளத்திற்கு இடம் கொடுக்கும். அதுவே கால மாற்றத்தின் காரணமாக வெப்பநிலை நிகழ்வு குறைவதால் தண்டவாளம் இறுகத் தொடங்கும். இதன் காரணமாக நீளம் குறைந்து, மீண்டும் தண்டவாளத்தில் இடைவெளி ஏற்படும்.ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா? |
எனவே குளிர் காலங்களில் நன்றாக இறுகி, நீளம் குறைந்து, பழைய நிலைக்கே தண்டவாளம் முழுமையாகத் திரும்பி விடும். இதனால் தான் தண்டவாளங்களில் இடைவெளி இருக்கிறது.
அதுவே தண்டவாளங்களில் இந்த இடைவெளி இல்லையென்றால் கோடையில் விரிவடைவதால் தண்டவாளங்கள் சிதைந்து விபத்துக்கு உள்ளாகும். அதாவது அதன் நீளம் அதிகரிக்கும் போது தண்டவாளம் வளைந்து விடும். இதனால் தண்டவாளம் சேதமடைந்து இரயில் விபத்துகள் ஏற்படும்.
ரயில் தண்டவாளத்தில் ஏன் கற்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? |
ஏன் ரயிலின் கடைசி பெட்டியில் LV என்ற போர்டு உள்ளது தெரியுமா |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |