Why Hotel Rooms Don’t Have Clocks in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பெரும்பாலும் நம்மில் பலருக்கும் தினம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால் தான் நம் பொதுநலம்.காம் பதிவில் தினம் ஒரு பயனுள்ள தகவலை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி நம் அனைவரின் வீட்டிலும் கடிகாரம் என்பது கண்டிப்பாக இருக்கும். கடிகாரம் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. காரணம் நம் வாழ்க்கையில் நேரம் காலம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நமக்கே தெரியும்.
நம் வாழ்க்கையில் கிடைக்கும் நேரத்தை என்றுமே வீணாக்கிவிட கூடாது. சரி அதுபோல வீடுகளில் மட்டும் இல்லை. கடைகளிலும், கோவில்களிலும், பேருந்துகளிலும் அவ்வளவு ஏன் இப்போது தொலைக்காட்சியில் கூட ஒரு ஓரமாக நேரத்தை காட்டுகிறார்கள். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் கடிகாரம் வைப்பதில்லை. அது எந்த இடம் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால், அது எந்த இடம், அந்த இடத்தில் கடிகாரம் வைக்காததற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ஒரு நாளைக்கு எத்தனை முறை கடிகாரத்தின் முட்கள் ஒன்று சேரும் தெரியுமா..
Hotel Room -களில் கடிகாரம் வைக்காததற்கு காரணம் என்ன..?
பொதுவாக நாம் அனைவருமே வெளியில் எங்காவது சுற்றுலா சென்றால் அங்கு ரூம் எடுத்து தங்குவோம். இதுபோல ரூம் எடுத்து தங்கிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா..? சரி அப்படி தங்கும் போது நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா..? அதாவது, பெரும்பாலும் ஹோட்டல் ரூம்களில் கடிகாரம் இருக்காது. இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..?
சரி ஏன் கடிகாரம் ஹோட்டல் ரூம்களில் இல்லை..? இதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக கடிகாரத்தில் இருக்கும் முட்கள் நகரும் போது ஒரு சிறிய ஒலியை எழுப்பும். இதனால் நாம் வபெட்டில் இருக்கும் போது அடிக்கடி நேரத்தை பார்ப்போம். ஆனால் ஹோட்டல் ரூம்களில் தங்கும் போது எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் தூங்க வேண்டும் என்று நினைப்போம். அதாவது ஹோட்டல் ரூம்களில் இருக்கும் போது அடிக்கடி நேரம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அதுமட்டுமில்லாமல், நேரம் என்ற ஒன்றை சிந்திக்க அனுமதிப்பதில்லை. மேலும் நம்மை நிம்மதியாக தூங்க அனுமதிக்கிறது. அதனால் கூட கடிகாரம் இல்லாமல் இருக்கலாம்.
புளிப்பு உணவுகளை பார்த்தவுடன் நாக்கில் எச்சில் சுரக்க காரணம் என்ன தெரியுமா..
ஆனால் இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்று கேட்டால், பொதுவாக ஹோட்டல் என்றால் பல அறைகளை கொண்டதாக தான் இருக்கும். அங்கு தினமும் பல மக்கள் வந்து தங்கி செல்கிறார்கள்.
அப்படி இருக்கையில் சுவர் கடிகாரங்கள் என்பது பேட்டரிகளால் இயங்குவதாக இருக்கும். அந்த பேட்டரிகள் பழுதாகிவிட்டால் அதை நாம் அடிக்கடி மாற்ற வேண்டியதாக இருக்கும். ஒருவேளை நாம் அந்த கடிகாரத்தை மாற்ற மறந்துவிட்டால், விருந்தினர்களுக்கு தவறான நேரத்தைக் காண்பிக்கும். இதனால் ஹோட்டல்களுக்கு புகார்கள் வர வாய்ப்பு இருக்கிறது. அல்லது மோசமாக, புகார் செய்யாத விருந்தினர்கள் மறுமுறை நம் ஹோட்டல்களுக்கு வருவதில்லை.
எனவே இதுபோன்ற பிரச்சனைகளால் தான் ஹோட்டல் ரூம்களில் கடிகாரங்கள் வைப்பதில்லை.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |