இதுக்கு இது தான் காரணமா..?
ஹலோ பிரண்ட்ஸ்..! Daily உம் ஒரு சுவாரஸ்யமான தகவலை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதேபோல் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு சுவாரஸ்யமானதாக தான் இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அதை பற்றி முழுதாக தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்தறியவும். இன்று நாம் குளிரான பொருட்கள் மீது ஏன் தண்ணீர் தோன்றுகிறது என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். சரி இதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஜீன்ஸ் பேண்ட்ல இந்த பாக்கெட் ஏன் இருக்குனு தெரியுமா
குளிரான பொருட்கள் மீது நீர் தோன்ற காரணம் என்ன..?
பொதுவாக நம் அனைவருக்குமே ஐஸ் வாட்டர் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதுவும் இப்போது Summer வேற தொடங்கிவிட்டது. இனி சொல்லவே வேண்டாம். பிரிட்ஜ் – க்கு அதிக வேலை வந்துவிட்டது என்று அர்த்தம்.
இனி அனைவருமே ஐஸ் வாட்டரை தான் அதிகம் தேடுவார்கள். சரி நீங்களும் ஐஸ் வாட்டர் குடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி குடிக்கும் போது அந்த ஐஸ் வாட்டர் வைத்திருக்கும் கிளாஸிலோ அல்லது வாட்டர் பாட்டில் மேலையோ, முட்டு முட்டாக நீர் தோன்றுவதை நாம் பார்த்திருப்போம்.
அப்படி பார்க்கும் வேளையில் ஏன் இப்படி தோன்றுகிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். சரி வாங்க அதற்கான பதிலை இங்கு காணலாம்.
கார்லையே சீட் பெல்ட் இருக்கு..! ட்ரெயின்ல ஏன் இல்ல.. காரணம் தெரியுமா..
பெரும்பாலும் எந்த ஒரு குளிரான பொருளாக இருந்தாலும் அதன் மேல், சொட்டு சொட்டாக தண்ணீர் கண்டிப்பாக தோன்றும். பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்றில் கூட ஈரப்பதம் இருக்கிறது.
அப்படி காற்றில் இருக்கும் ஈரப்பதம் ஐஸ் வாட்டர் இருக்கும் பாட்டிலில் படியும் போது அது நீராக மாறி வடிகிறது. கன்டென்சேஷன் காரணமாக குளிர்ந்த பொருளைக் கொண்ட பாட்டில்களின் வெளிப்புறத்தில் நீர்த்துளிகள் உருவாகின்றன. குளிர்ந்த பொருட்களில் உள்ள நீரானது காற்றில் உள்ள நீராவியை குளிர்விக்கும் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது. எனவே அது வாயுவிலிருந்து திரவ நிலைக்கு மாறுகிறது.
அதாவது நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் நீர் தான் குளிர்ந்த பொருட்களில் மோதி சொட்டு சொட்டாக வடிகிறது.
ஆள்காட்டி விரலை நீட்டி சாப்பிட கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |