ஜீன்ஸ் பேண்ட்ல இந்த பாக்கெட் ஏன் இருக்குனு தெரியுமா..?

Advertisement

ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டின் ரகசியம் 

ஹலோ பிரண்ட்ஸ்..! தினமும் நம் பொதுநலம் பதிவின் வாயிலாக ஏதாவது ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு சுவாரஸ்யம் நிறைந்ததாக தான் இருக்கும். சரி பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆண்களுக்கு சமமாக பெண்களும் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். அதுபோல தான் உடைகளும் இருக்கின்றன.

அதாவது அந்த காலத்தில் ஆண்கள் மட்டும் தான் பேண்ட் அணிவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஆண்கள் அணியும் ஆடைகளை போலவே பெண்களும் அணிகிறார்கள். அப்படி அணியும் ஆடை தான் ஜீன்ஸ் பேண்ட். சரி இந்த ஜீன்ஸ் பேண்டை ஆண்கள் பெண்கள் என்று அனைவருமே அணிகிறார்கள். அப்படி அணியும் ஜீன்ஸ் பேண்டில் சிறியதாக ஒரு பாக்கெட் இருக்கும். அந்த பாக்கெட் எதற்கு என்று உங்களுக்கு தெரியுமா..? வாங்க அதை தெரிந்து கொள்ளலாம்..!

ஆள்காட்டி விரலை நீட்டி சாப்பிட கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்

ஜீன்ஸ் பேண்ட் வந்த கதை: 

why jeans pant has small pocket

ஜீன்ஸ் பேண்ட் பயன்படுத்தும் அனைவருமே இந்த சிறிய பாக்கெட்டை பார்த்திருப்பீர்கள். அப்படி பார்க்கையில் ஏன் இந்த சிறிய பாக்கெட் எதற்கும் உதவாமல் இருக்கிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

பொதுவாக இந்த ஜீன்ஸ் பேண்ட்கள் பெரும்பாலும் சுரங்களில் பணியாற்றும் நபர்களுக்காக  செய்யப்பட்டது. இதற்கு காரணம் சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் மிக அழுத்தமான துணியில் செய்த ஆடைகளை ஆணிவது தான் அவர்களுக்கு நல்லது. இந்த நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது தான் ஜீன்ஸ் பேண்ட். 

why jeans pant has small pocket

அதுபோல அந்த காலகட்டத்தில் பாக்கெட் கடிகாரம் என்பது மிகவும் பிரபலமாக இருந்தது. அவர்கள் மணி பார்ப்பதற்கு இந்த பாக்கெட் கடிகாரத்தை தான் அதிகம் பயன்படுத்தினார்கள்.

அதிலும் சுரங்க பணியாளர்களிடம் இந்த பாக்கெட் கடிகாரம் கட்டாயம் இருக்கும். அவர்கள் இடைவெளி எடுப்பதற்காக இந்த பாக்கெட் கடிகாரத்தை பயன்படுத்தினார்கள்.

என்னது மனுஷனோட DNA -வும் இந்த பழத்தோட DNA -வும் ஒரே மாதிரி இருக்கா.. அது என்ன பழம் தெரியுமா

ஜீன்ஸ் பேண்டில் இந்த சிறிய பாக்கெட் ஏன் இருக்கிறது..? 

ஜீன்ஸ் பேண்டில் இந்த சிறிய பாக்கெட் ஏன் இருக்கிறது

அப்படி சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் தங்களுடைய பாக்கெட் கடிகாரத்தை பத்திரமாக வைத்து கொள்வதற்காக அமைக்கப்பட்டது தான் இந்த சிறிய பாக்கெட்.

இதுபோல ஜீன்ஸ் பேண்ட்டில் இந்த பாக்கெட் வைக்கும் ஐடியாவை கொடுத்தது ஜீன்ஸ் பேண்ட் தயாரிப்பாளரான லிவி ஸ்டாரஸ் என்பவர் தான்.

சரி இப்போதாவது தெரிந்து கொண்டீர்களா..? ஜீன்ஸ் பேண்டில் இந்த பாக்கெட் ஏன் இருக்கிறது என்று.

அதுபோல ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் பட்டன்கள் இரும்பில் செய்யப்பட்டதற்கும் சுரங்க தொழிலாளர்கள் தான் காரணம். அதாவது சுரங்க தொழிலாளர்கள் கடினமான வேலைகளை செய்பவர்கள். அடிக்கடி குனிந்து நிமிர்ந்து பணியாற்றுவார்கள். அதனால் சாதா பட்டன்கள் தாங்காது என்பதால் இரும்பாலான பட்டன்கள் கொடுக்கப்படுகின்றன.

ஒரு மனிதனின் உடலில் எத்தனை நரம்புகள் உள்ளன

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement