Why Not Extend The Index Finger And Eat in Tamil
வாசகர்களே வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். அது என்ன பதிவாக இருக்கும் என்பதை மேல் இருக்கும் ஹெட்டிங்கை படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரி உங்களுக்கு இந்த அனுபவம் இருக்கிறதா..? என்னவென்றால், நீங்கள் என்றாவது சாப்பிடும் பொழுது ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி சாப்பிட்டு இருக்கிறீர்களா..? அதேபோல் அதற்காக வீட்டில் இருப்பவர்களிடம் திட்டு வாங்கி இருக்கிறீர்களா..? சரி அப்படி திட்டு வாங்கும்போது ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். சரி வாங்க நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி சாப்பிடுவது நல்லதா..? கெட்டதா..? என்று தெரிந்து கொள்ளலாம்..!
என்னது மனுஷனோட DNA -வும் இந்த பழத்தோட DNA -வும் ஒரே மாதிரி இருக்கா.. அது என்ன பழம் தெரியுமா
ஆள்காட்டி விரலை நீட்டி சாப்பிடுவது நல்லதா..? கெட்டதா..?
பொதுவாக நம்மில் பலருக்கும் சாப்பிடும் போது ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி சாப்பிடும் பழக்கம் இருக்கும். அப்படி சாப்பிடும் போது, நம் வீட்டில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்று அனைவருமே நம்மை திட்டுவார்கள்.
ஏன் சாப்பிட கூடாது என்று கேட்டால், அதெல்லாம் தெரியாது, நீ விரலை நீட்டி சாப்பிடாதே என்று சொல்வார்கள். ஆனால் நமக்கு இது நல்லதா..? இல்லை கெட்டதா..? என்று கூட தெரியாது.
அதனால் அதற்கான காரணத்தை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நமது கைகள் மற்றும் கால்கள் பஞ்சபூதங்களின் வழித்தடங்கள் என்று சொல்வார்கள். நமது உடலை உருவாக்கும் இயற்கையின் ஐந்து கூறுகள் என்று சொல்லலாம்.
மேலும் நம் கைகளின் ஒவ்வொரு விரலும் ஐந்து உறுப்புகளின் நீட்சியாகும். கட்டைவிரல் என்பது ஜீரணத்திற்கு உதவும். ஆள்காட்டி விரல் வாயு பிரச்னையை சரி செய்கிறது. நடுவிரல் மனித உடலில் உள்ள சிறிய செல்களுக்கு இடைவெளி அளிக்கிறது. மோதிர விரல் உடல் தசைகள் வலுவாக இருக்க உதவுகிறது. சுண்டு விரல் உடலில் இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது.
அப்படி நாம் அனைத்தும் விரல்களையும் சேர்த்து சாப்பிடும் போது, நம் உடலிற்கு 5 விதமான சக்திகள் கிடைக்கிறது. மனதிற்கு மகிழ்ச்சியும் அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கிறது.
இதனால் தான் ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி சாப்பிடக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்கிறார்கள்.
ஒரு மனிதனின் உடலில் எத்தனை நரம்புகள் உள்ளன
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |