என்னது மனுஷனோட DNA -வும் இந்த பழத்தோட DNA -வும் ஒரே மாதிரி இருக்கா..? அது என்ன பழம் தெரியுமா..?

Advertisement

Human DNA Compared To Banana in Tamil

ஹலோ நண்பர்களே..! இன்றைக்கு நாம் காணப்போகும் பதிவு உங்கள் அனைவருக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கும். பொதுவாக நாம் அனைவருமே பழங்கள் சாப்பிட்டு இருப்போம். அப்படி நாம் சாப்பிடும் பழங்களில் ஒரு பழம் மட்டும் மனிதனுடைய DNA -வுடன் ஒத்து போகிறது என்று சொல்கிறார்கள். அது எந்த பழம் என்று உங்களுக்கு தெரியுமா..? அது என்ன பழம், அது எவ்வளவு சதவீதம் ஒத்துப்போகிறது என்ற தகவலை தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!

ஒரு மனிதனின் உடலில் எத்தனை நரம்புகள் உள்ளன

மனிதனுடைய DNA -வுடன் ஒத்துப்போகும் பழம் எது..?

மனிதனுடைய DNA -வுடன் ஒத்துப்போகும் பழம் எதுபொதுவாக DNA என்பது Deoxyribonucleic Acid என்று சொல்லப்படுகிறது. இது உயிரியலில் மிக முக்கியமான மூலக்கூறு ஆகும்.

இது டியோக்ஸிரிபோநியூக்ளிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு கரிம இரசாயனமாகும். இது மரபணு வழிமுறைகள் மற்றும் புரத தொகுப்புக்கான தகவல்களைக் கொண்டுள்ளது.

இந்த டிஎன்ஏ -வை பெரும்பாலான அனைத்து உயிரினங்களின் செல்களிலும் காணலாம். இது இனப்பெருக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். அதில் மரபணு பரம்பரை ஏற்படுகிறது. அதாவது பழைய தலைமுறையினரிடமிருந்து வருங்கால சந்ததியினருக்கு பரம்பரை மாற்றுவதே இந்த DNA -வின் முக்கிய நோக்கமாகும்.

சரி இப்போது DNA பற்றி தெரிந்து கொண்டீர்கள். அந்த பழம் என்ன பழம் என்று சொல்லவே இல்லையே என்று யோசிப்பீர்கள். அதையும் சொல்கிறேன்.

ஒரு மனிதனின் மூளை எத்தனை கிராம் இருக்கும் தெரியுமா..

மனிதனுடைய DNA -வுடன் ஒத்துப்போகும் பழம் எது

அது வாழைப்பழம் தான். அட ஆமாம் நண்பர்களே வாழைப்பழம் தான் மனிதனின் DNA -வுடன் 40% வரை ஒத்துப்போகிறது. அதாவது மனிதனுடைய DNA -வும் வாழைப்பழத்தின் DNA -வும் 40% ஒரே மாதிரியாக இருக்கிறது.

இதை 2013 ஆம் ஆண்டு தேசிய மனித மரபணு ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள்.

அதுபோல மனிதனுடைய மரபணுக்களில் சுமார் 60 சதவிகிதம் வாழைப்பழ மரபணுவுடன் இணையாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. “அந்த 60 சதவிகிதத்தில், மனித புரதத்தின் அமினோ அமில வரிசையை வாழைப்பழத்தில் சமமானதாக ஒப்பிடும்போது, ​​குறியிடப்பட்ட புரதங்கள் தோராயமாக 40 சதவிகிதம் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்.

மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கும் உங்களுக்கு தெரியுமா..

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement