Why Trains Don’t Have Seat Belts Reason in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! நம் அனைவருக்குமே பயணம் செய்வது என்றால் அவ்வளவு புடிக்கும். பயணம் என்றால் பேருந்தில் பயணம் செய்வது, பைக்கில் பயணம் செய்வது, ரயிலில் பயணம் செய்வது, காரில் பயணம் செய்வது மற்றும் ரயிலில் பயணம் செய்வது என்று சொல்லலாம். அதில் அனைவரும் விரும்புவது ரயில் பயணம் தான். அப்படி நாம் அனைவருமே ரயிலில் பயணம் செய்திருப்போம். அதேபோல மற்ற வாகனங்களிலும் பயணம் செய்திருப்போம். அப்படி நாம் பயணம் செய்யும் போது நம் மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கும் என்று சொல்வார்கள். சரி நீங்கள் ரயிலில் பயணம் செய்யும் போது இந்த விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா..? அதாவது ரயிலுக்கு ஏன் சீட் பெல்ட் இல்லை என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் அதற்கான காரணத்தை இப்போது காணலாம்.
ஜீன்ஸ் பேண்ட்ல இந்த பாக்கெட் ஏன் இருக்குனு தெரியுமா
ரயிலில் சீட் பெல்ட் ஏன் இல்லை..? காரணம் என்ன..?
பொதுவாக நாம் காரில் பயணம் செய்யும் போது அதில் நம்முடைய பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் ரயிலில் ஏன் சீட் பெல்ட் இல்லை என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..?
அதுபோல பேருந்து, லாரி, கார் போன்ற வாகனங்களை விட ரயில் தான் அதிவேகத்தில் செல்கிறது. ஆனால் அதில் ஏன் பயணிகளுக்கு சீட் பெல்ட் இல்லை என்று நம் அனைவருக்குமே ஒரு யோசனை வந்திருக்கும். அதை இப்போது தெரிந்து கொள்வோம்.
பொதுவாக நம்மில் பலரும் ரயில் பயணத்தை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் சுதந்திரமாக சுற்றி வர வேண்டும் என்பது தான். மேலும் நீண்ட தூர பயணம் என்றால் அது ரயில் பயணம் தான்.
ஆள்காட்டி விரலை நீட்டி சாப்பிட கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்
அதுமட்டுமில்லாமல், ரயிலில் மிகவும் ரிலாக்சாக பயணிக்க முடியும். என்ன தான் ரயில்கள் அதிக வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தாலும் அதனுள் மிக சுலபமாக நடமாட முடியும். பக்கத்து கம்பார்ட்மென்டிற்கு செல்ல முடியும்.
ஆனால் கார்களில் அது முடியாது. அவ்வளவு ஏன் சுதந்திரமாக தண்ணீர் கூட குடிக்க முடியாது. ஆனால், ரயில்களில் டீ-யை கூட அசால்டாக குடிக்க முடியும். இதற்கு காரணம் தண்டவாளங்களே. இதனால் சின்ன அலுங்கள்-குலுங்கள் கூட ரயில்களில் இருக்காது.
இதுபோல சுதந்திரமான அனுபவத்திற்கு ரயில் பயணம் தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
அப்படிப்பட்ட ரயில் பயணத்தில் சீட் பெல்ட் கொடுத்து அதை கட்டாயமாக்கினால், அது சிறை பிடித்து வைத்திருப்பது போல இருக்கும். இதனால் தான் ரயிலில் சீட் பெல்ட் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
என்னது மனுஷனோட DNA -வும் இந்த பழத்தோட DNA -வும் ஒரே மாதிரி இருக்கா.. அது என்ன பழம் தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |