Rental Agreement Scam in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே இந்த உலகில் நிம்மதியாக வாழ்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது உணவு, உடை, உறையுள் ( வீடு ). இதில் மூன்றாவதாக உள்ள வீடு என்பது மனிதனின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவுகிறது. அதனால் நாம் அனைவருக்குமே நமக்கு என சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் தான் சொந்தமாக ஒரு வீட்டினை வாங்கி கொள்வோம் அல்லது கட்டிக்கொள்வோம்.
ஆனால் சொந்தமாக தனக்கென்று வீட்டினை வாங்க அல்லது கட்டமுடியாதவர்கள் வடை வீட்டினை நாடி செல்வார்கள். அப்படி நாம் ஒரு வீட்டினை Rental-க்கு கேட்டு செல்கின்றோம் என்றால் அந்த வீட்டின் உண்மையான உரிமையாளர்கள் நம்மை சில விஷயங்களில் நம்மை ஏமாற்றுகிறார்கள். அப்படி என்ன செய்கிறார்கள் என்பதை இந்த பதிவை முழுதாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.
SIM Card-யை முதன் முதலில் உருவாக்கியவர் யார் தெரியுமா
Why Rental Agreement is Only for 11 Months in Tamil:
நாம் அனைவருக்குமே நமக்கு என சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் தான் சொந்தமாக ஒரு வீட்டினை வாங்கி கொள்வோம் அல்லது கட்டிக்கொள்வோம். ஆனால் சொந்தமாக தனக்கென்று வீட்டினை வாங்க அல்லது கட்டமுடியாதவர்கள் வடை வீட்டினை நாடி செல்வார்கள்.
அதேபோல் நாம் இப்பொழுது ஒரு வீட்டிற்கு Rental-க்கு செல்ல போகின்றோம். அதற்கு முன்பு அந்த வீட்டின் உண்மையான உரிமையாளர்களிடம் நாம் நமக்கான Rental ஒப்பந்தத்தை பதிவு செய்வோம்.
அப்படி நாம் நமக்கான Rental ஒப்பந்தத்தை பதிவு செய்யும் பொழுது ஒரு விஷயத்தை கவனித்து இருப்போம். அதாவது பொதுவாக Rental ஒப்பந்தத்தை பதிவு செய்யும் பொழுது 11 மாதங்களுக்கு மட்டுமே பதிவு செய்வார்கள்.
அது ஏன் என்று என்றாவது சிந்தனை செய்து இருக்கின்றிர்களா..? அதனை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
பதிவுச் சட்டம் 1908 இன் தேவைகளின்படி, ஒரு சொத்தை ஒரு வருடத்திற்கு குத்தகைக்கு பதிவு செய்வது கட்டாயமாகும். எனவே, பதிவு செய்வதற்கான கடினமான செயல்முறையைத் தவிர்க்க, வாடகை ஒப்பந்தங்கள் பொதுவாக பதினொரு மாத காலத்திற்கு வரைவு செய்யப்படுகின்றன.
நீங்கள் 11 மாதங்களுக்கு மேலாக நீங்கள் குத்தகை ஒப்பந்தம் போடுகிறீர்கள் என்றால் அதற்கு நீங்கள் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும். இத்தகைய கடுமையான கட்டணங்களைச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக, ஒப்பந்தத்தை பதிவு செய்யாமல் இருப்பதற்காக தான் 11 மாதங்களுக்கு மட்டுமே Rental ஒப்பந்தம் பதிவு செய்யப்படுகிறது.
வாடகை வீடு தேடும்போது கவனிக்க வேண்டியவை
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |