Vinaiyalanaiyum Peyar Enral Enna
வினையாலணையும் பெயர் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கணத் தொடர். ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவதும் வினையாலணையும் பெயர் எனப்படும். சரி இந்த பதிவில் வினையாலணையும் பெயர் எடுத்துக்காட்டுகள், வகைகள் போன்றவற்றை விரிவாக பார்க்கலாம் வாங்க.
வினையாலணையும் பெயர் எடுத்துக்காட்டுகள்:
- பாடியவன் பாராட்டுப் பெற்றான்.
- பாடியவனுக்குப் பரிசு கிடைத்தது.
இதில் முதல் எடுத்துக்காட்டில் உள்ள வினைமுற்று, பெயர்த்தன்மை பெற்று வந்துள்ளது.
இரண்டாவது எடுத்துக்காட்டு பெயர்த்தன்மை பெற்று வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளது.
வினையாலணையும் பெயர் வகைகள்:
வினையாலணையும் பெயர் மூன்று வகைப்படும். அவை, தன்மை வினையாலணையும் பெயர், முன்னிலை வினையாலணையும் பெயர், படர்க்கை வினையாலணையும் பெயர் என்பவை ஆகும்.
தன்மை வினையாலணையும் பெயர்
தன்மை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால் தன்மை வினையாலணையும் பெயர் எனப்படும்.
(எ.கா)
- எடுத்தேனைப் பார்த்தாயா.
- எடுத்தேமைப் பார்த்தாயா.
இதில் முதலில் உள்ள எடுத்துக்காட்டு ஒருமையையும்.
இரண்டாவது எடுத்துக்காட்டு பன்மையையும் குறிக்கிறது.
முன்னிலை வினையாலணையும் பெயர்
முன்னிலை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால் முன்னிலை வினையாலணையும் பெயர் எனப்படும்.
(எ.கா)
- சென்றாயைக் கண்டேன்.
- சென்றீரைக் கண்டேன்
இதிலும் முதலில் உள்ள எடுத்துக்காட்டு ஒருமையையும்.
இரண்டாவது எடுத்துக்காட்டு பன்மையையும் குறிக்கிறது.
படர்க்கை வினையாலணையும் பெயர்
படர்க்கை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால் படர்க்கை வினையாலணையும் பெயர் எனப்படும்.
- (எ.கா) படித்தவனுக்குப் பரிசு கிடைத்தது.
தன்மை வினையாலணையும் பெயர், முன்னிலை வினையாலணையும் பெயர், படர்க்கை வினையாலணையும் பெயர் ஆகிய மூன்றும் உடன்பாட்டுப் பொருளில் வந்துள்ளன.
வினையாலணையும் பெயர் எதிர்மறைப் பொருளில் வருவதும் உண்டு.
- (எ.கா) பாடாதவர் பரிசு பெறமுடியாது.
இதில் பாடாதவர் என்பது எதிர்மறைப் பொருளை உணர்த்துகிறது.
தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள்
தொழிற்பெயர் | வினையாலணையும் பெயர் |
1. தொழிலை மட்டும் உணர்த்தும். | 1. தொழிலையும் தொழில் செய்த பொருளையும் உணர்த்தும். |
2. படர்க்கை இடத்தில் மட்டும் வரும். | 2. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் வரும். |
3. காலம் காட்டாது. | 3. காலம் காட்டும். |
தொழிற்பெயர், படர்க்கை இடத்தில் மட்டும் வரும். வினையாலணையும் பெயர் மூவிடத்திலும் வரும் என்பது இந்த நூற்பாவின் பொருள்.
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? |
அணி இலக்கணம் |
இலக்கணம் என்றால் என்ன? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |