Benefits of Eating Rice For Breakfast
பொதுவாக நாம் அனைவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் காலை உணவு சரியாக சாப்பிட்டால் தான் அன்றைய தினம் ஆனது ஆரோக்யமாகவும், சுறு சுறுப்பாகவும் இருக்கவும். இவ்வாறு இருக்கையில் நாம் சாப்பிடும் காலை உணவு ஆனது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி மற்றும் பொங்கல் என இதுபோன்ற வகைகளில் இருக்கிறது. ஆனால் சிலர் இதுபோன்ற உணவுகளை சாப்பிடாமல் காலையில் தினமும் காலையில் அரிசியால் செய்யப்பட்ட உணவினை தான் சாப்பிடுவார்கள். அதுவும் குறிப்பாக நாம் அனைவரும் வெள்ளை அரிசி சாதத்தினை தான் சாப்பிடுகிறோம். இதுபோன்ற அரிசி சாதத்தினை சாப்பிடுவதனால் நம்முடைய உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
அரிசியில் உள்ள சத்துக்கள்:
- சோடியம்- 1.6 மி.கி
- சர்க்கரை- 0.1 கிராம்
- கலோரிகள்- 206
- பொட்டாசியம்- 55.3 மி.கி
- நார்ச்சத்து- 0.6 கிராம்
- கார்போஹைட்ரேட்- 45 கிராம்
- நிறைவுற்ற கொழுப்பு- 0.1 கிராம்
மேலே சொல்லப்பட்டுள்ள சத்துக்கள் அனைத்தும் 1 கப் அரிசி சாதத்தில் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் வைட்டமின் C, வைட்டமின் B6, வைட்டமின் D, கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற சத்துக்களும் காணப்படுகிறது.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிவப்பு அரிசி பயன்கள் பற்றி தெரியுமா |
அரிசி சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
உணவு செரிமானம் அடைய:
தினமும் காலை உணவாக அரிசி சாதத்தினை சாப்பிடுவதனால் நம்முடைய உடலில் செரிமான பிரச்சனை வராமல் இருக்க செய்கிறது. மேலும் நாம் சாப்பிடும் உணவினையும் எளிதில் செரிமானம் அடைய செய்வதற்கு உகந்ததாக இருக்கிறது.
உடலுக்கு ஆற்றலை தரும்:
நாம் சாப்பிடும் அரிசி சாதத்தில் கார்போஹைட்ரேட் ஆனது நிறைந்து இருக்கிறது. இதனை நாம் காலை உணவாக எடுத்துக்கொள்வதனால் நம்முடைய உடக்கு தேவையான ஆற்றலை காலையிலேயே அளித்து அந்த நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருக்க உதவுகிறது.
உடல் எடை குறைவதற்கு:
அரிசியில் குறைந்த அளவு சர்க்கரை, சோடியம், கொழுப்பு, நார்சத்து மற்றும் பிற சத்துக்கள் காணப்படுகிறது. அதனால் அரிசி சாதத்தினை நாம் சாப்பிடுவதன் உடல் எடை விரைவில் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் அரிசி சாதத்தில் கார்போஹைட்ரேட் இருப்பதால் இதனை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.
இரத்த சர்க்கரை அளவு:
பொதுவாக உடலில் இரத்த சர்க்கரையின் அளவானது காலை நேரத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. அதனால் காலை உணவாக சாதத்தினை நாம் சாப்பிடுவதனால் இதில் உள்ள குறைந்த சர்க்கரையின் அளவு நம்முடைய உடலில் இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடு:
அரிசியில் என்ன தான் வைட்டமின் C நிறைந்து இருந்தாலும் கூட இது நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை நேரடியாக அளிப்பது இல்லை. அதனால் அரிசியுடன் சேர்த்து பச்சை பட்டாணி, காய்கறிகள், முட்டை மற்றும் பால் இதுபோன்றவற்றை சேர்த்து உணவாக சாப்பிட்டால் மட்டுமே நம்முடைய உடலில் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கி சத்துக்கள் கிடைக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |