இந்த உணவை அதிகமாக சாப்பிட்டால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுமாம்..!

Foods That Cause Clogging of Blood Vessels in Tamil

Cause of Heart Problem in Tamil

இக்காலத்தில் உள்ள ஒழுங்கற்ற உணவு முறையால் பெரும்பாலானோருக்கு உடலில் அதிக அளவில் ஆரோக்கிய பிரச்சனை ஏற்படுகிறது. இது நாளடைவில் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும். அப்படி ஏற்படும் உடல் பிரச்சனைகளில் ஒன்று இரத்தக்குழாய் அடைப்பு. இப்போதுபெரும்பாலான மக்கள் இதயம் சம்மந்தப்ட்ட பிரச்சனைகளினால் தான் இறக்கிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு, நாம் உட்கொள்ளும் ஒழுங்கற்ற உணவு வகைகளே காரணம். அந்த வகையில், இரத்த குழாயில் அடைப்பை ஏற்படத்தக்கூடிய உணவுகளை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். எனவே கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

Foods That Cause Clogging of Blood Vessels in Tamil:

பீட்சா:

பீட்சா

இதயத்திற்கு ஆபத்தான கொழுப்பை ஏற்படுத்தக்கூடிய உணவுகளில் பீட்சாவும் ஒன்றாகும். எனவே, பீட்சாவை அதிகமாக சாப்பிடும்போது இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது.

பிரெஞ்சு பிரைஸ்:

பிரெஞ்சு பிரைஸ்

பிரெஞ்சு பிரைஸில் எளிதில் ஜீரணமாகக்கூடிய கார்போஹைட்ரேட் உள்ளது. இது இரத்தத்தின் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமில்லாமல், பிரெஞ்சு பிரைஸில் உள்ள உப்பு மற்றும் கொழுப்பு இதயத்திற்கு தீங்கினை ஏற்படுத்துகிறது.

நீங்கள் தினமும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறீங்களா.! அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!

கூல்ட்ரிங்ஸ்:

கூல்ட்ரிங்ஸ்

இப்போது இருக்கும் பெரும்பாலான கூல்ட்ரிங்ஸில் சோடா உள்ளது. எனவே சோடா கலந்த கூல்ட்ரிங்ஸை குடிக்கும்போது  உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது இன்சுலின் அளவை அதிகரிப்பதோடு உடல் எடையையும் அதிகரிக்க செய்கிறது. வெயில் காலத்தில் கூல்ட்ரிங்ஸ் குடிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அதனை அளவோடு குடிக்க வேண்டும் அல்லது பழச்சாறுகளை குடிக்க வேண்டும்.

ஐஸ்கிரீம்:

ஐஸ்கிரீம்

கோடை காலமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று ஐஸ்கிரீம். ஆனால் ஐஸ்கிரீமை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடலில் என்னென்ன  பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

ஐஸ்கிரீமில் அதிக அளவில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்க செய்வதோடு இதயத்திற்கு பல்வேறு தீங்கினையும் ஏற்படுத்துகிறது.

ஃபிரைடு சிக்கன்:

ஃபிரைடு சிக்கன்

எண்ணெய்யில் வறுத்தெடுக்கப்பட்ட சிக்கனை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது. இது நாளடைவில் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

காலை உணவாக சாதம் சாப்பிடுபவரா நீங்கள்..! அப்போ இந்த விஷயத்தை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்..!

இறைச்சி:

இறைச்சி

இறைச்சி சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளித்தாலும் அதனை அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக,  இதயத்தில் பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமனாக உள்ளவர்கள் இறைச்சி சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேற்கூறியுள்ள உணவுகள் அனைத்தும் இரத்தக்குழாய் அடைப்பு மற்றும் இதயத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்துவதால் இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்