மலச்சிக்கல் பிரச்சனைக்கான தீர்வு

Advertisement

Malasikkal Solution in Tamil

மனிதர்களுக்கு எப்படி உணவு, உடை, நீர் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதேபோல், அந்த உணவை சாப்பிட்ட பிறகு மலம் கழிப்பதும் அவசியமான ஒன்றாக தான் இருக்கிறது. ஆனால் இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மலசிக்கல் என்ற பிரச்சனையை சந்திக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் உணவு முறை தான். ஏனென்றால் உணவு முறை என்பது ரொம்ப முக்கியமானது.

நம் முன்னோர்களின் காலத்தில் உணவு மற்றும் தண்ணீர் சரியாக குடித்தார்கள். இதனால் அவர்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கவில்லை. ஆனால் இன்றைய காலத்தில் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டது. தண்ணீரும் சரியாக குடிப்பதில்லை. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கின்றனர்.

மலச்சிக்கல் பிரச்சனையை கண்டறிவது எப்படி.?

ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்று பார்ப்போம். ஒரு வாரத்தில் 3 முறை மலம் கழிப்பது, மற்றும் அப்படி நீங்கள் கழிக்கும் போதும் வலியுடனும் மற்றும் கடினமாக கழித்தால் அவை தான் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட காரணம்:

மலச்சிக்கல் பிரச்னையை கண்டறிவது எப்படி

  • உணவு முறை
  • நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது
  • உடலிற்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது
  • மன அழுத்தம்
  • மலம் வரும் போது மலத்தை கழிக்காமல் அதனை கட்டுப்படுத்துவது

தவிர்ப்பது எப்படி.?

  • முதலில் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தவிர்க்க வேண்டுமென்றால் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.
  • நார்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்து கொள்ள வேண்டும், அதன் பிறகு வாரத்தில் இரண்டு நாட்கள் கீரை வகைகளை உணவில் எடுத்து கொள்வதை அவசியமாக வைத்து கொள்ளுங்கள்.
  • முக்கியமாக மலம் வரும் போது மலத்தை கழிக்க வேண்டும், அவ்வப்போது நீங்கள் அடக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும்.
  • தினமும் ஒரு நேரத்தில் மலம் கழிப்பதை வழக்கமாக வைத்து கொண்டாலே அதுவே உங்களுக்கு தினமும் பழகிவிடும்.
  • மன அழுத்தம் இல்லாமல் மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள்.
  • மேல் கூறப்பட்டுள்ளதை பின்பற்றினாலே மலசிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்:

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

  • பலரும் இன்றைய காலத்தில் உட்கார்ந்த இடத்திலேயே வேலையை செய்கின்றனர். இதனால் உடல் அசைவு இல்லாமல் இருக்கிறது. அதனால் நீங்கள் தினமும் 30 நிமிடம் முதல் 40 நிமிடம் வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற உடற்பயிற்சி செய்தாலே மலச்சிக்கலை சரி செய்யலாம்.
  • நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கலாம். அதில் தேங்காய் தண்ணீர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிட வேண்டும்.
  • வாழைப்பழம் தினமும் இரண்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள் , இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement