Potato Benefits in Tamil
நாம் அனைவருக்குமே மிகவும் பிடித்த காய்கறிகள் என்று சில இருக்கும். அப்படி உள்ள சில காய்கறிகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடித்த காய் என்றால் அது உருளைக்கிழங்கு தான். அதாவது உருளைக்கிழங்கை விரும்பாதவர்களே இருக்க முடியாது. மேலும் உருளைக்கிழங்கு இல்லாத சமையலறையே இருக்காது. உருளைக்கிழங்கு விரும்புபவர்களுக்கும் சரி, அதை விரும்பாதவர்களும் சரி, அதனை சமமான அளவு நேசித்தே ஆக வேண்டும். அப்படி நாம் அனைவரால் மிகவும் விரும்பி சாப்பிடப்படும் உருளைக்கிழங்கினை நாம் சரியான அளவு எடுத்து கொண்டால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்ன நன்மைகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் மாரடைப்பு வராதாம் வேணாமுன்னு ஒதிக்கிடாதீர்கள்
உருளைக்கிழங்கு நன்மைகள்:
ஊட்டச்சத்துக்கள்:
173 கிராம் வேக வைத்த உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்களை காணலாம்,
- கலோரிகள் – 161
- கொழுப்பு – 0.2 கிராம்
- புரதசத்து – 4.3 கிராம்
- கார்போஹைட்ரேட் – 36.6 கிராம்
- நார்ச்சத்து – 3.8 கிராம்
- வைட்டமின் சி – 28%
- வைட்டமின் பி 6 – 27%
- பொட்டாசியம் – 26%
- மாங்கனீசு – 19%
- மெக்னீசியம் – 12%
- பாஸ்பரஸ் – 12%
- நியாசின் – 12%
- ஃபோலேட் – 12%
பொதுவாக உருளைக்கிழங்கை சமைப்பதை பொறுத்து ஊட்டச்சத்துகள் மாறுபடும். மேலும் உருளைக்கிழங்கின் தோலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளது.
நார்ச்சத்து:
நார்ச்சத்து அதிகம் நிறைந்த கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. அதனால் அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருந்து நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கிறது.
அதனால் செரிமான இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. அதே போல் இரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து, இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
இதய ஆரோக்கியம்:
மனித இதயம் சீராக செயல்படுவதற்கு பொட்டாசியம் சத்து ஒரு அவசியத் தேவையாக இருக்கிறது. உருளைக்கிழங்கில் வளமான அளவில் பொட்டாசியம் இருப்பதால், அது நமது உடலின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்திற்கு சரியான அளவில் இரத்தம் சென்று வர உதவுகிறது. இதனால் இதயம் சீராக இயங்குகிறது.
இரத்த அழுத்தம்:
ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம், அதிக உடல் எடை, செரிமான கோளாறுகள், நீரிழிவு நோய் ஆகிய அனைத்தும் இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழி வகை செய்யும்.
எனவே உருளைக்கிழங்கை தினமும் சரியான அளவு எடுத்து கொண்டால், உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து உங்களின் இரத்த அழுத்த பிரச்சனை கட்டுக்குள் வைத்து கொள்ள பயன்படுகிறது.
மக்கானாவை உணவில் அதிக அளவு சேர்த்து கொள்கிறீர்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
முக அழகு கூட:
முகம் மற்றும் உடலின் இதர பகுதிகளில் இருக்கும் சருமத்திற்கு பல வகைகளில் பேருதவியாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு பசை போல் அரைத்து பசும்பாலில் கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கின்ற எண்ணெய் பசைகள் நீங்குகிறது.
இதனால் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகத்தை பொலிவாக்குகிறது.
சிறுநீரக செயல்பாடு மேம்பட:
பொதுவாக உருளைக்கிழங்கில் மிகவும் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. எனவே இது நமது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உருளைக்கிழங்கில் மாங்கனீசு உள்ளது. இந்த மாங்கனீசு நமது சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கிறது.
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |