Green Grapes Benefits in Tamil
நாம் அனைவருக்குமே பழங்கள் சாப்பிடுவது என்பது மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு எந்தெந்த பழங்கள் தான் பிடிக்கும் என்று ஒரு லிஸ்ட் வைத்திருப்பார்கள். அப்படி ஒவ்வொருவருக்கும் தனியாக உள்ள பழங்கள் லிஸ்ட்டில் கண்டிப்பாக இந்த திராட்சை பழமும் இடம் பெற்றிருக்கும். அப்படி அனைவருக்கும் மிகவும் பிடித்த திராட்சை பழம் ஓர் அற்புதமான பழம். அதில் கருப்பு, பச்சை என இருவகை திராட்சைகளை மார்கெட்டுகளில் கண்டிருப்போம். அதில் பச்சை நிற திராட்சை அதிகமாக புளிப்பு இல்லாமல், தித்திக்கும் என்பதால் பலரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த திராட்சைகள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வாரி வழங்குகின்றன. அப்படி என்ன நன்மைகளை இவை நமக்கு அளிக்கின்றன என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். அப்படியே சிந்தனை செய்து கொண்டே இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். இந்த பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது உங்கள் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் போகலாம்.
திராட்சை பழ ஜூஸினை அதிகம் குடிப்பவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
பச்சை திராட்சை நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
பொதுவாக திராட்சையில் நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து ஆகியவை உள்ளது. அதே போல் வைட்டமின் பி, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து போன்றவையும் இருக்கின்றன.
இவை அனைத்தும் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கின்றன.
சிறுநீரக கல்லை போக்கும்:
நாம் வாழ்வது வெப்ப மண்டல பகுதி என்பதால் நமக்கு சிறுநீரக கல் உருவாகும் சாத்தியம் அதிகம். ஆனால், திராட்சைப் பழங்களை தினமும் சாப்பிட்டு வருவதால் சிறுநீரக கல் உருவாகுவது தடுக்கப்படும். ஏனென்றால் இதில் மிகுதியான நார்ச்சத்து உள்ளது.
உடல் எடை குறைக்க:
ஒரு சிலர் சில உணவினை சாப்பிட்டால் நமது உடல் எடை அதிகரித்துவிடும் என்றும், சில காய்கறி மற்றும் பழத்தை சாப்பிட்டால் நமது உடல் எடை அதிகரித்து விடும் என்றும் சிந்தனை செய்வார்கள்.
அப்படிப்பட்டவர்கள் இந்த திராட்சைப் பழங்களை சாப்பிடலாம் ஏனென்றால் இதில் கலோரிகள் மிக குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் அதிகம். மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நீண்ட நேரத்திற்கு பசியை தாங்கும் சக்தியை கொடுக்கும். இதனால் உங்களின் உடல் எடை குறைந்து கட்டுக்குள் இருக்கும்.
Grape Juice குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
எலும்பு ஆரோக்கியம்:
இந்த திராட்சையில் உள்ள காப்பர், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்றவை எலும்புகளின் வலிமைக்கும், உருவாக்கத்திற்கும் முக்கியமாக தேவைபடும் நுண் ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
ஆஸ்துமா:
பொதுவாக பச்சை திராட்சை ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுதலை தரும். ஏனென்றால் திராட்சை நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கும். அதனால் நீங்கள் தினமும் சிறிதளவு பச்சை திராட்சை சாப்பிடுவது உங்களின் சுவாச மண்டல பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுதலை பெற செய்யும்.
மக்கானாவை உணவில் அதிக அளவு சேர்த்து கொள்கிறீர்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |