Term Deposit Vs Fixed Deposit
வணக்கம் நண்பர்களே..! இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். பணம் இருந்தால் தான் இந்த உலகில் உயிர்வாழவே முடியும். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. உயிர் வாழ்வதற்கு உணவும், நீரும், காற்றும் தான் தேவை என்று சிலர் சொல்வீர்கள். ஆனால் அந்த நீரையும், உணவையும் கூட நாம் இன்று காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். இப்போ சொல்லுங்கள் வாழ்வதற்கு பணம் தான் அவசியம் அல்லவா.
சரி நாம் என்ன தான் தினமும் கை நிறைய சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நமக்கு அதிக அளவில் பணம் தேவைப்படும். அப்போது நமக்கு உதவுவது நாம் சேமித்த பணமாக இருக்காது. நாம் முதலீடு செய்த பணமாக தான் இருக்கும். அதனாலேயே இன்றைய நிலையில் பலரும் போஸ்ட் ஆபிஸ் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். சரி Term Deposit மற்றும் Fixed Deposit இது இரண்டில் எது சிறந்தது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
டெர்ம் டெபாசிட் Vs பிக்சட் டெபாசிட் இரண்டில் எது சிறந்தது..?
Term Deposit:
டெர்ம் டெபாசிட் என்பது கால வைப்புத்தொகை என்று அழைக்கப்படுகிறது. டெர்ம் டெபாசிட் என்பது ஒரு நிதி நிறுவனத்தில் உள்ள கணக்கில் பணம் வைப்புத் தொகையை உள்ளடக்கிய நிலையான கால முதலீடு ஆகும். டெர்ம் டெபாசிட் முதலீடுகள் பொதுவாக ஒரு மாதம் முதல் ஓரிரு ஆண்டுகள் வரையிலான குறுகிய முதிர்வுகளைக் கொண்டிருக்கும்.
வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது நுகர்வோர் டெர்ம் டெபாசிட்களில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புள்ளது. டெர்ம் டெபாசிட்டுகள் முதலீட்டு காலத்திற்கு ஒரு நிலையான விகிதத்தைக் கொண்டுள்ளன.
பிக்சட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்.. முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா |
Fixed Deposit:
பிக்சட் டெபாசிட் என்பது நிலையான வைப்புத்தொகை என்று சொல்லப்படுகிறது. இது கால வைப்பு அல்லது நேர வைப்புத்தொகை என்றும் அழைக்கப்படுகிறது. வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் நிதி தயாரிப்புகள், அவை எதிர்காலத்திற்காகச் சேமிக்க பாதுகாப்பான வழியை வழங்குகின்றன. மேலும் பிக்சட் டெபாசிட் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 Fixed Deposit பற்றிய தகவல்கள்
கால வைப்பு Vs நிலையான வைப்பு:
டெபாசிட் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டிக்கப்படும் போது ஒரு டெர்ம் டெபாசிட் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. அதாவது 3 மாதங்கள், 6 மாதங்கள் என்று பயன்படுத்தப்படுகிறது.
நிலையான வைப்புத்தொகை 6 மாதங்கள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளுடன் ஒப்பிடுகையில், நிலையான வைப்புத் தொகை அதிக வருவாய் விகிதத்தை வழங்குகிறது.
👉 ரெக்கரிங் டெபாசிட் (RD) என்றால் என்ன..? இதில் எப்படி முதலீடு செய்வது
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |