Air Force Common Admission Test Results 2024 | AFCAT Final Merit List Cut Off
AFCAT இந்திய விமானப்படை தேர்வு முடிவுகள் 2024: இந்திய விமானப்படையில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக வருடத்திற்கு இரண்டு முறை விமானப்படை பொது நுழைவுத் தேர்வை (AFCAT) நடத்தி வருகிறது. இந்த தேர்வானது இந்தியா முழுவதும் 2024 பிப்ரவரி 16 முதல் 18 வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். 2024 ஆம் ஆண்டிற்கான AFCAT 1 தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டதால், அதில் கலந்து கொண்டு தேர்வெழுதிய மாணவர்கள் AFCAT தேர்வு முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றன.
இந்த AFCAT தேர்வு முடிவுக்கான (AFCAT Result 2024) வெளியீட்டுத் தேதி, Release Date, Merit List மற்றும் Cut Off Marks உள்ளிட்ட விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் சில விவரங்களை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
AFCAT Exam 1 Result 2024:
இந்திய விமானப்படையானது ஒவ்வொரு ஆண்டும் தகுதிமிக்க மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஒரு தேர்வை நடத்தி வருகிறது. அதாவது AFCAT – Air Force Common Admission Test என்பது இந்திய விமானப்படை ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை IAF -ல் அதிகாரிகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் எழுத்துத் தேர்வாகும்.
தேர்வுகள் | Air Force Common Admission Test (AFCAT) 1
விமானப்படை பொது நுழைவுத்தேர்வு 1 |
வருடம் | 2024 |
நிறுவனம் | Indian Air Force |
காலியிடம் | 317 |
தேர்வு நடைபெற்ற தேதி | 16, 17, and 18 பிப்ரவரி 2024 |
தேர்வு செயல்முறை | எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் |
தேர்வு முடிவு தேதி | மார்ச் (2 ஆம் வாரம்) விரைவில் அறிவிக்கப்படும் |
AFCAT Official Website | https://afcat.cdac.in/AFCAT/ |
AFCAT Result 2024 Cut Off:
2024 ஆம் ஆண்டிற்கான AFCAT கட் ஆஃப் மதிப்பெண்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மேலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி தேவைப்படும்.
How To Download AFCAT Result 2024:
மேலும் தேர்வெழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான சில படிகளை இப்போது காணலாம்.
- முதலில் அதிகாரப்பூர்வ afcat.cdac.in இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- அடுத்து “AFCAT 1 முடிவு 2024” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அதில் சரியான மின்னஞ்சல் ஐடி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
- பின்பு AFCAT முடிவு 2024 மற்றும் Scorecard என்று திரையில் தோன்றும்.
- அதில் நீங்கள் AFCAT தேர்வு முடிவுகளை 2024 தெரிந்து கொள்ளலாம்.
Air Force Common Admission Test Results Direct Link | Link |
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |