ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..!

Advertisement

ஐம்பூதங்கள் வேறு பெயர்கள் | Imputhangalin Veru Peyargal in Tamil

நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும். அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான ஐம்பூதங்கள் என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..

Impoothangal in Tamil | Impoothangal Veru Peyargal in Tamil:

நாம் அனைவருக்குமே ஐம்பூதங்கள் பற்றிய அனைத்து தகவல்களும் என்று நினைத்து கொண்டிருப்போம். ஆனால் அது உண்மை அல்ல. அவற்றை பற்றி அறிந்து கொள்வதற்கு பல பல தகவல் உள்ளது.

முதலில் ஐம்பூதங்கள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.

நிலம்:

நிலம் என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும்.
வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மை, வாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன.

நெருப்பு:

நெருப்பு அல்லது தீ என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயலான தகனத்தின்போது, பொருட்களில் விரைவான ஆக்சிசனேற்றம் நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய வெப்பம், ஒளி ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்.

நீர்:

நீர் ஆதாரங்கள் என்றால் தண்ணீர் பெறும் மூலங்கள் ஆகும். அவைகள் அனைத்து மனிதர்களுக்குப் பயனுள்ளவையாகவோ, அல்லது இயல்திறம் கொண்ட தாகவோ இருக்கின்றது.

காற்று:

காற்று என்பது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கின்றது. புவியைப் பொறுத்தவரை, வளிமண்டலத்தில் வளிமம் பெருமளவில் நகரும்போது காற்று எனப்படுகிறது.

ஆகாயம்:

ஆகாயத்திற்கு தன்னில் அனைத்து சடப்பொருள்களுக்கு இடமளிக்கும் தன்மை உள்ளது. ஆகாயம் மற்ற நான்கு பூதங்களான காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகியவைகள் தோன்றக் காரணமாக உள்ளது.

ஐம்பூதங்களில் ஆகாயம் எனும் பூதத்தை யாராலும் தொட முடியாது பார்க்கவும் முடியாது. ஆகாயத்தை எவராலும் தொட முடியாது, குளிர், வெப்பம், உலர்தல், மணம் போன்ற குணங்கள் அற்றது. ஆகாயம் என்பது வெற்றிடம் ஆகும். எனவே ஆகாயம் எனும் பூதம் எதனாலும் கரைபடாதது.

கருணை என்பதற்கான வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா

Impoothangal Veru Peyargal in Tamil | ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்கள்:

ஐம்பூதங்கள் வேறு பெயர்கள் 
நிலம் தரை, மண், இடம், பூவுலகு, பூமி, மனை, புவி.
நெருப்பு அல்லது தீ கொள்ளி, அக்கினி, கனல், அனல்.
நீர்      தண்ணீர், வெள்ளம், புனல்.
வளி    காற்று, வாயு, தென்றல், புயல்.
விசும்பு ஆகாயம், வானம், விண்.

 

இரக்கம் என்ற சொல்லுக்கு இவ்வளவு அர்த்தங்கள் உள்ளதா
ஜோடி என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா
மகிழ்ச்சி என்பதை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா இது தெரியாம போச்சே 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement