முகத்தில் மீசை மற்றும் தாடி வளர என்ன செய்ய வேண்டும்?
மீசை தாடி வளர என்ன செய்ய வேண்டும்? இதோ எளிய வழிகள்:- ஆண்களுக்கு அழகு என்பதே மீசை மற்றும் தாடி இரண்டும் தான், அதிலும் சில ஆண்களுக்கு அடர்ந்த தாடியுடன் கூடிய மீசை மிக அழகாக இருக்கும். இப்போது உள்ள பெண்களுக்கு மிகவும் அழகாக தாடி மீசை வைத்திருக்கும் ஆண்களை மிகவும் பிடிக்கும். இருப்பினும் சில ஆண்களுக்கு மீசை மற்றும் தாடி என்பது வளராது அல்லது மீசை தாடி இருந்தும் இல்லாததுபோல் இருக்கும். இருப்பினும் இதற்கு என்ன காரணம் என்றால்… ஹார்மோன்கள் குறைவாக இருப்பது தான் காரணம் என்று சொல்லலாம்.
இருப்பினும் ஆண்களுக்கு மீசை தாடி வளர சில எளிய செயல் முறைகளை தினமும் பின்பற்றி வந்தாலே, போதும் மிக விரைவிலேயே ஆண்களுக்கு மீசை தாடி வளர ஆரம்பித்து விடும்.
சரி வாங்க மீசை வளர என்ன செய்ய வேண்டும் (meesai thadi valara) என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம்…
Thadi valara tips in tamil:
புரோட்டீன் உணவுகள்:
உடலின் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாகவே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
குறிப்பாக நீங்கள் ஆசைபடும் மீசை மற்றும் தாடி வளர புரோட்டீன் அதிகம் தேவைப்படுகிறது. அதாவது புரோட்டீன் நிறைந்த உணவுகளான பீன்ஸ், முட்டை, பால் மற்றும் மீன் போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
டெஸ்டோஸ்டிரோன்:
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களின் முடிவளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன். இந்த ஹார்மோன்னின் அளவு குறைவாக இருந்தால் முடி வளர்ச்சி இருக்காது.
இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்க ஜிங் அதிகமுள்ள உணவுகளான வேர்க்கடலை, எள், பூசணி விதைகள், தர்பூசணி, பீன்ஸ், ஓட்ஸ், முந்திரி, தயிர், டார்க் சாக்லட் உட்கொள்வது சிறந்தது.
விளக்கெண்ணெய்:
மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியாக வளர ஒரு சிறந்த வழி விளக்கெண்ணெய். விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |