6 வயது நிரம்பினால் தான் 1-ம் வகுப்பு சேர்க்கை மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு..

Advertisement

Child School Admission Age 6 Years 

நம்ம முன்னோர்கள் காலத்தில் 5 வயதில் பள்ளியில் சேர்த்தார்கள். அப்போது நேரடியாக 1-ம் வகுப்புக்கு சென்றார்கள். பாதி பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தார்கள, பாதி பேர் கல்வி கற்காதவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் LKG சேர்க்கிறார்கள். அதன் பிறகு UKG அப்புறம் தான் 1-ம் வகுப்பு படிக்கிறார்கள். இதனை 3 வயது இருக்கும் போதே சேர்த்து படிக்க சொல்கிறார்கள். இதில் அரசு மாற்றத்தை கொண்டுள்ளது. அவை என்னவென்று தெரிந்து கொள்வதற்கு இந்த பதிவை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு 6 வயது இருக்கும் போது தான் 1-ம் வகுப்பு சேர்க்க வேண்டும்:

தேசிய கல்வி கொள்கை 2020 நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் பிற மாநிலங்கள் இதனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது தேசிய கல்வி கொள்கை என்பது 5 3 3 4  என்ற அடிப்படையில் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு நிலைகள் இருக்கிறது. அவற்றை பற்றி காண்போம்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024-25 (முழு விவரங்கள்)

அங்கன்வாடி முதல் 2-ம் வகுப்பு வரை-5 ஆண்டுகள் (3-8 வயது)

3 முதல் 5-ம் வகுப்பு வரை – 3 ஆண்டுகள் (8-11 வயது)

6 முதல் 8-ம் வகுப்பு வரை – 3 ஆண்டுகள் 11-14 வயது)

9 முதல் 12-ம் வகுப்பு வரை – 4 ஆண்டுகள் (14-18 வயது)

குழந்தைகள் 6 வயதில் 1-ம் வகுப்பு படித்தால் அவர்களின் அறிவாற்றல் மற்றும் சமூக வளர்ச்சியின் புதிய, முக்கியமான கட்டத்தில் இருப்பார்கள். அந்த வயதில் பள்ளிப் படிப்பை தொடங்கினால், கற்றல் நடவடிக்கைகளில் நன்றாக ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனால் அனைத்து பள்ளிகளும் இதனை கடைபிடிக்க வேண்டும் என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement