உங்களின் வாட்ஸப்பிற்கு ஆபத்து..! இதை மட்டும் செய்யாதீர்கள்..!

Advertisement

Do Not Click This Link On WhatsApp in Tamil

ஸ்மார்ட் போன் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால் அதில் தான் அதிகமாக நேரத்தை செலவு செய்கிறோம். அதேபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான விஷயங்களை பற்றி அதிகம் தெரிந்துகொண்டு வருகிறோம். அதேபோல் முன்பு ஒரு விஷயங்களை பற்றி நாம் உறவினர்களுக்கு சொல்ல வேண்டுமென்றால் லெட்டர், தந்தி மூலம் தான் அதிகமாக செய்திகளை தெரிவிப்போம். ஆனால் இது அனைத்தும் மாறிவிட்டது. உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக் கொள்கிறோம். செய்திகளை பரிமாறிக்கொள்வதில் அதிகமாக பங்கு வகிப்பது வாட்ஸப் தான். இதில் தான் நாம் வீடியோ கால் முதல் பேசிக் கொள்கிறோம்.

அவ்வளவு ஏன் இந்த கொரோனா காலத்தில் இதில் தான் சில கல்யாணம் நடந்தது. அதேபோல் நிமிடத்தில் அனைத்து விஷயங்களை வாட்சப் மூலம் அனுப்புகிறோம். ஆனால் இது நன்மைகள் என்றாலும் சிலவற்றை வைத்து அதன் மூலம் நம்முடைய பர்சனல் விஷயங்களை கூட தெரிந்துகொள்ள முடியும். அதாவது இப்போது அதிகமாக தனிப்பட்ட நபரின் சமூக வலைதள கணக்குகளை முடக்க முடிகிறது என்று செய்திகளை தெரிந்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அது மற்ற சமூக வலைத்தளங்கள் என்று நினைப்பீர்கள். நீங்கள் வைத்திருக்கும் வாட்ஸப் கூட தற்போது முடக்கும் நிலைக்கு உள்ளது. அது எப்படி முடியும் என்று கேட்பீர்கள் அதனை பற்றிய தகவலை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Do Not Click This Link On WhatsApp in Tamil:

நம்முடைய வாட்சப்பை உலகம் முழுவதும் 45 கோடிக்கும் அதிகமான பயனர்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் தொடர்ந்து மெட்டா நிறுவனம் பயனர்களின் வசதிகளை அறிமுகம் செய்துகொண்டு தான் வருகிறது.

சில காலமாக இந்த ஹேக் செய்யும் செய்திகள் அதிகம் வந்துகொண்டு தான் உள்ளது. அதாவது இதுவரை வாட்ஸப்பில் இதுபோன்ற பிரச்சனைகள் வருவது குறைவு தான். ஆனால் மெட்டா நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களுக்கு மட்டும் புதிய சிக்கல் வருவதாக தெரிவித்துள்ளது.

அதாவது ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் வாட்சப்பை முடக்க ஒரு லிங்க் பகிரப்பட்டு வருகிறது.

அட WhatsApp-ல் இந்த மூன்று Update-ம் செம சூப்பர் 

அதாவது நம்முடைய குரூப் சாட்டில் அல்லது தனி நபர் சாட்டில் ஒரு லிங்க் பகிரப்பட்டு உள்ளது. அதனை நாம் கிளிக் செய்யும் போது நம்முடைய செல்போனில் வாட்ஸப் செயலில் முடக்கப்படும். அதிலும் சில மாடல் ஆண்ட்ராய்டு வெர்சன் செல்போன்கள் விரைவில் முடக்கப்படும்.

இதனை நாம் தெரியாமல் கிளிக் செய்துவிட்டால் உடனே உங்களுடைய லேப்டாப்பிலோ, கம்ப்யூட்டரிலோ வாட்சப் வெப் ஓபன் செய்து அந்த லீக்கை டெலிட் செய்துவிடவேண்டும்.

அப்டேட்டூனா இப்படி தாங்க இருக்கனும்  வேறு எதுல நம்ம வாட்சப்ல தான்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement