அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா விண்ணப்பம் இன்றெலிருந்து தொடங்குகிறது

Advertisement

Aanmega Sutrula to Murugan’s Arupada Houses

நுங்கம்பாக்கத்தில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில், கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 2,646 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முதியோர்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயத்தையும் அவர் கூறினார், அது என்னவென்றால் மூத்த குடிமக்களுக்கு இலவசமாக தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

இத்திட்டமானது எதற்காக கொண்டுவரப்பட்டது ஏனென்றால், பொதுவாக மூத்த குடிமக்களுக்கு கோவிலுக்கு செல்வது என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் வெளியே கொஞ்சம் தூரமான கோவில்களுக்கு செல்வது என்றால் அது சற்றே கடினம் தான். ஒரே பயணத்தில் எல்லா கோவில்களையும் அவர்களால் சுற்றி பார்க்க முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அவர் இந்த திட்டத்தினை செயல்படுத்துள்ளார்.

இந்த முருகனின் அறுபடை வீடு சுற்றுலாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் இதனை பற்றிய முழு தகவல்களையும் பெற, நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்.

அறுபடை ஆன்மீக இலவச பயணம் விண்ணப்ப படிவம்

மூத்த குடிமக்களுக்கான ஆன்மீக சுற்றுலா 

Please Install JNews Themes To use JNews Gallery Shortcode Feature

முதியோர்கள் ஒரே பயணத்தில் முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை செல்வது கடினம், அதனால் இந்து சமய அறநிலையத் துறை, ஆண்டுக்கு 60 முதல் 70 வயதுக்குட்பட்ட 200 பேர் அல்லது 1,000 பக்தர்களை ஆண்டுக்கு 5 முறை ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்வதாக கூறியுள்ளது. 

அதுமட்டுமின்றி இராமேசுவரம் பயணத்திற்காக 300 நபர்களை அழைத்து செல்வதாக கூறப்படுகின்றது.

Free Tour for Murugan Arupadai Veedu: விண்ணப்பிப்பது எப்படி?

இதனையடுத்து, ஜனவரி 28ஆம் தேதி முதல் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் தொடங்கவுள்ளது.

துறையின் இணையதளத்தில், இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இன்று ஜனவரி 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

முதல் சுற்றில், 200 தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் ஆன்மீக பயணங்களை தொடர மற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதுபோன்ற நிறைய ஆன்மீக பயணங்களுக்கு அரசு ரூ.75லட்சத்தை மானியமாக வழங்கி உள்ளது.

கடைசி தேதிக்கு முன்னர் நீங்கள் விண்ணப்பித்தால் நீங்களும் இந்த ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளலாம். இதில் ஏதும் சந்தேகம் இருந்தால் அறநிலையத்துறை இணையதளத்திற்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal
Advertisement