Ramar Photo on Rs Note What is the truth
இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக வலைத்தளம் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் உலகில் நடக்கும் அப்டேட் நியூஸ்களை தெரிந்து கொள்கின்றார்கள். இதில் சமீபத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்திற்கு பதிலாக ராமர் படம் அச்சிடப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை பற்றிய தகவலை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
500 ரூபாய் நோட்டில் ராமர் படம் இடம் பெறுமா.!
500 ரூபாய் நோட்டில் காந்தியின் படத்திற்கு பதிலாக ராமரின் படமும், செங்கோட்டைக்கு பதிலாக ராமர் கோயிலும் இருக்கும் ரூபாய் நோட்டுகள் ஜனவரி 22-ம் தேதி வெளியாகும் என் தகவல் வந்துள்ளது. இவை உண்மையா என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.
எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam |
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் போன்றவர்கள் வர இருக்கின்றார்கள். மேலும் 2,500 க்கும் மேற்பட்ட பிரபல பிரமுகர்களை அழைத்துள்ளார்கள். இதனை ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை விழாவை எடுத்து நடத்துகிறது.
வீடு தேடி வரும் இலவச அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்
கோவிலின் கும்பாபிஷேகத்தை பற்றி மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் (Social Media Viral ) அயோத்தியில் உள்ள ராமர் மற்றும் ராமர் கோயில் போன்றவை அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள் வைரலாகி வருகிறது. இதனை பலரும் உண்மை என நம்பி கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை முற்றிலும் மார்பிங் செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இவை வதந்தி இதில் எந்த விதமான உண்மையும் இல்லை. இந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் பற்றி இந்த ரிசர்வ் வங்கியோ அல்லது அரசாங்கமோ எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் கூறவில்லை.
ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில், தற்போதுள்ள மகாத்மா காந்தியின் உருவம் பதித்த 500 ரூபாய் நோட்டு காட்டப்படுகிறது. ஆக இந்த ராமர் படமுள்ள மார்பிங் செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டு, அதனால் இதனை பற்றி எந்த குழப்பமும் அடைய தேவையில்லை.
தஞ்சையிலிருந்து விமான சேவை தொடக்கம்..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |