தஞ்சையிலிருந்து விமான சேவை தொடக்கம்
விமானத்தில் செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது, ஒரு முறையாவது விமானத்தில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். திருச்சி மற்றும் சென்னையில் தான் ஏர்போர்ட் உள்ளது. இன்னும் பக்கத்தில் நல்லா இருக்குமே என்று நினைப்பார்கள்.
டெல்டா மாவட்டங்களிலே முதன்மை நகரமாக தஞ்சாவூர் திகழ்ந்து வருகிறது.திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணி, படிப்பு என பல்வேறு காரணங்களுக்காக தஞ்சைக்கு வந்து செல்கிறார்கள்.அதேபோல் திருச்சி விமான நிலையத்துக்கு தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பயணிகளே அதிகளவில் சென்று வருகிறார்கள்.இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து உள்நாட்டு விமானங்களை இயக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை பற்றிய செய்தியை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
தஞ்சாவூரில் விமான சேவை:
தஞ்சாவூர் டு புதுக்கோட்டை செல்லும் வழியில் விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. இதன் மூலம் 1990- ஆண்டு வாயுதூத் விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. ஆனால் இதன் மூலமாக எண்ணிக்கை இல்லாததால் இந்த சேவையானது நிறுத்தப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இதை விமானப் படை கையகப்படுத்தி 2012 முதல் முதன்மை விமானப்படை நிலையமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடத்தியது. டெல்டா மாவட்டத்தின் மக்களுக்காக தஞ்சாவூரில் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam |
இதனால் தான், சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சை விமான நிலையத்திலிருந்து விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள தஞ்சை விமானப்படைத் தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானம் இயக்கப்படுகிறது.
முதலில் 20 சீட் கொண்ட விமானங்களை இயக்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியை அடுத்த குருகிராமை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏர்டாக்சி நிறுவனம் இந்த சேவையை வழங்குகிறது.
மேலும் இவை தஞ்சாவூரில் இருந்து பெங்களூர், தஞ்சாவூரில் இருந்து சென்னை, பெங்களூரில் இருந்து தஞ்சாவூர், சென்னையில் இருந்து தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. அதேபோன்று ராமநாதபுரம், வேலூர், நெய்வேலி ஆகிய நகரங்களுக்கும் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
2024 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |