வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எம்மாடி என்னது தங்கம் விலை இப்படி ஏறிக்கிட்டே இருக்கு

Updated On: March 5, 2024 7:00 PM
Follow Us:
today gold rate 600 increase in tamil
---Advertisement---
Advertisement

தங்கம் விலை இன்று 05.03.2024

தங்கம் என்பது பெரிய முதலீடாக இருக்கிறது, இதனால் பலரும் தங்கத்தை சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பணக்காரர்கள் தங்கத்தை வாங்க வேண்டும் என்று நினைத்தால் உடனே வாங்கி விடுவார்கள்,. அதுவே நடுத்தர குடும்பத்தினர் நினைத்த உடன் வாங்க முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்கம் வாங்க வேண்டும் என்று பணத்தை சிறுக சிறுக சேமித்து வைப்பார்கள். அதனால் தினமும் தங்க விலையை பார்த்து கொண்டே இருப்பார்கள். அதாவது, எப்போது தங்க விலை ஏறுகிறது, இறங்குகிறது என்று பார்த்து கொண்டே இருப்பார்கள்.

எப்போது தங்க விலை குறைகிறதோ அப்போ சேமித்து வைத்த பணத்திலிருந்து நகையை வாங்குவார்கள். ஆனால் கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அவை எவ்வளவு அதிகரித்துள்ளது என்று முழு பதிவையும் படித்து அறிந்து கொள்வோம் வாங்க.

கோல்டு ரேட் இன்று 05.03.2024:

தங்கம் விலை இன்று 05.03.2024

நேற்றைய தினம் 22 கேரட் 1 கிராம் தங்கமானது 5,940 ரூபாய் விற்பனையில் இருந்தது, ஆனால் இன்றைய தினம் 75 ரூபாய் அதிகரித்து 6,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் நேற்று 47,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட்டது, இன்றைய நாள் 22 கேரட்டின் 8 கிராம் விலையானது 600 ரூபாய் அதிகரித்து 48,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்டின் 1 கிராம் நேற்றைய நாள் 6,410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் 75 ரூபாய் அதிகரித்து 6,485 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ ஒரு கிராம் அதாவது 8 கிராமின் விலையானது 600 ரூபாய் அதிகரித்து 51,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்வர் ரேட் இன்று 05.03.2024:

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 78.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 1200 ரூபாய் அதிகரித்து 78,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிளாட்டினம் ரேட் இன்று 05.03.2024

பிளாட்டினம் ஒரு கிராமின் விலை 3,171 ரூபாய்க்கும், ஒரு 8 கிராம் பிளாட்டினம் விலையானது 25,368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now