தை பிறந்தால் வழி பிறக்கும்
எல்லா வலிகளும்
கடந்து போகட்டும்
அனைவர் உள்ளங்களிளும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
அன்பான உறவுகள் அனைவருக்கும்
தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்
Pongal Wishes Quotes in Tamil
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இன்றளவும் நாம் பல விஷயங்களை பின்பற்றி வந்து கொண்டிருக்கின்றோம். அப்படி நாம் பின்பற்றும் பல விஷயங்களில் ஒன்று தான் நம்மால் கொண்டாடப்படும் பண்டிகைகள். அவ்வாறு நம்மால் கொண்டாடப்படும் பல பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது என்றால் அது நாம் உட்கொள்ளும் உணவுகளை நமக்கு அளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி கூறும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் தான்.
இப்படிப்பட்ட சிறப்புடைய பொங்கல் அன்று நாம் நமது மகிழ்ச்சியினை நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழ்வோம். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் ஒரு சில பொங்கல் வாழ்த்து கவிதைகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள வாழ்த்து கவிதைகளை உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
Pongal Wishes Quotes:
உறவுகள் அனைவருக்கும்
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அன்பும், ஆசையும் பொங்க,
இன்பமும், இனிமையும் பொங்க
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க
தை திருநாள் வாழ்த்துகள்..!
Happy Pongal Wishes Quotes in Tamil:
இந்த தைத்திருநாளில்
நாம் உண்ண உணவளிக்கும்
இயற்கை அன்னைக்கும்
உழவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..!
Happy Pongal Wishes Quotes:
அறுவடைத் திருநாளான
பொங்கல் நன்னாளில்
உங்களின் வாழ்வில் அன்பும்,
அமைதியும் பெருகி,
நலமும், வளமும் பெருகட்டும்.
Pongal Wishes in Tamil:
தரணியெங்கும் கொண்டாடும்
தைப்பொங்கல் திருநாளில்
பொங்கலோடு இணைந்து அனைவர் மனங்களும்
இன்பத்தில் பொங்க..
பொங்கல் வாழ்த்துக்கள்..!
Pongal Valthu Kavithai in Tamil:
நோயற்ற சுகத்தை பெற்று
மாசற்ற செல்வதை பெற்று
அன்புடைய சுற்றத்தை பெற்று
இதயத்தில் இன்பத்தை பெற்று
மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்..
இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |