How to Check Class 11 Result in Tamil
11 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடிந்த நிலையில் அதற்கான ரிசல்ட் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அந்த ரிசல்ட்டை தெரிந்துகொள்ள அனைத்து மாணவ மாணவிகளும் ஆர்வமாக இருப்பீர்கள். அதேபோல் அதனை தெரிந்துகொள்வது எப்படி பார்ப்பது என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – ரிசல்ட் பார்ப்பது எப்படி?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6 –ம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். மேலும் மார்ச் 13 ம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
இப்போது அனைத்து மாணவர்களும் நன்றாக எழுதியிருந்தாலும் ரிசல்ட் என்றால் கொஞ்சம் அனைவருக்கும் பயமாக இருக்கும். முதலில் 10 வகுப்பு மாணவர்கள் அதேபோல் 11 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை அதாவது 19.05.2023 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. அதனை தெரிந்து கொள்ளவது எப்படி என்று பார்க்கலாம்.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம் மூலமாக தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், மைய மற்றும் கிளை நூலகங்களிலும், தங்களது பள்ளிகளிலும் தெரிந்துகொள்ளலாம்.
அதுமட்டுமின்றி ஸ்மார்ட் போன் மூலம் உங்களின் பதிவு எண்களுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்திகளாக மதிப்பெண்கள் அனுப்பப்படும்.
இணையதளம் மூலமாக பார்க்க விரும்புபவர்கள்
- www.tnresults.nic.in,
- www.dge1.tn.nic.in,
- www.dge2.tn.nic.in,
- www.dge.tn.gov.in
என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம். இதில் அனைவரும் தேர்வு முடிவுகளை பார்ப்பதால் கொஞ்சம் தாமதமாகும் ஆகவே கொஞ்சம் நேரம் பொறுத்து அதன் பின்பு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |