கபடி விளையாட்டு விதிமுறைகள் | Kabaddi Rules in Tamil | கபடி விளையாட்டு பற்றி எழுதுக
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் கபடி விளையாட்டின் விதிகள் மற்றும் விதிமுறைகளை தெரிந்து கொள்வோம். கபடி விளையாட்டு பலருக்கும் பிடித்த விளையாட்டு. நமது ஊரிலே பல கபடி வீரர்கள் இருப்பார்கள். பொதுவாக ஒவ்வொரு விளையாட்டிற்கு விதிமுறைகள் இருக்கும். கபடி விளையாட்டு பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதனை காண்பதற்காகவே பல கூட்டம் நிரம்பி இருக்கும்.
கபடி விளையாட்டு சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்றும் அழைக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு தான் கபடி. அக்காலத்தில் ஜல்லிக்கட்டிற்கு தாயாராகும் வீரர்கள் செய்யும் பயிற்சியே கபடி ஆகும். இந்த விளையாட்டில் பல விதிமுறைகள் உள்ளது. அதனை பற்றி இன்றைய பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Kabaddi Rules and Regulations in Tamil:
கபடி விளையாட்டு எத்தனை பேர்.?
கபடி விளையாட்டில் இரண்டு குழுக்களாக இருப்பார்கள். ஒவ்வொரு குழுவிலும் 7 நபர்கள் இருப்பார்கள். மொத்தம் 14 நபர்கள் இருப்பார்கள்.
கபடி விளையாட்டு நேரம்:
கபடி போட்டி 40 நிமிடம் நடைபெறும். இடைவேளைக்கு பிறகு குழுக்கள் இடம் மாற்றப்படும்.
கபடி மைதானம் அளவு:
ஆண்கள் விளையாடும் மைதானம் 13 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் விளையாடும் மைதானம் 11 மீ x 8 மீ கொண்டதாக இருத்தல் உடையதாக இருத்தல் வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ சதுரங்க விளையாட்டின் விதிமுறைகள் தெரியுமா..?
கபடி விளையாட்டு நடுவர்கள் எத்தனை பேர்.?
- ஒரு போட்டிக்கு 5 நடுவர்கள் இருப்பார்கள். மைதானத்திற்கு நடு பகுதியில் 2 நடுவர்கள், மைதானம் முடியும் பகுதியில் 2 நடுவர்களும், மைதானத்தை சுற்றி வருவதற்கு ஒருவரும் மொத்தம் 5 நடுவர்கள் இருப்பார்கள்.
- ஒரு வீரரை எச்சரிக்கை, புள்ளிகளை அறிவிப்பது, போட்டியிலுருந்து வீரரை நீக்குவது போன்ற அதிகாரம் நடுவருக்கு உண்டு.
- ஒரு போட்டியில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன.
ரெய்டருக்கான விதிகள்:
- கபடி விளையாட்டில் ரெய்டர்கள் செல்லும் போது கபடி கபடி என்று சொல்ல வேண்டும். நீங்கள் கபடி என்பதை சொல்லாமல் நிறுத்தினாலோ அல்லது எதிரணியின் உறுப்பினரை தொடுவதில் தோல்வி அடைந்தாலோ ரெய்டர் அவுட் ஆகிறார்.
- ரெய்டர் செல்லும் போது எதிரணி காரர்கள் அவர் மைதானத்தின் கோட்டை அடைவதை தடுக்க வேண்டும். எதிரணி வீரர்கள் ரெய்டரின் உடைகள், தலைமுடி, உடல் உறுப்புகளை தவிர வேற எந்த பகுதியையும் பிடிக்க கூடாது.
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |