விளையாடுவதால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.?

Advertisement

What Are The Benefits of Sports

நம் முன்னோர்களின் காலத்தில் மொபைல் பயன்பாடு இல்லை. அதனால் பள்ளி விட்டு வீடு திரும்பியதும் எல்லா பிள்ளைகளும் சேர்ந்து வாசலில் விளையாடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள பிள்ளைகளுக்கு விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாமல் போகிவிட்டது. எந்த நேரம் பார்த்தாலும் கையில் போன் தான் இருக்கிறது.

பெற்றோர்களே குழந்தை ஏதும் ரொம்ப அடம் பிடித்தால் மொபைலில் வீடியோவை காட்டி அமைதிப்படுத்துகிறார்கள். நான்கு சுவற்றுக்குள்ளயே அவர்களின் பொழுது கழிந்து விடுகிறது. விளையாடுவதால் நமது உடலிற்கு பல நன்மைகள் இருக்கிறது. அதனை பற்றி தெரிவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

எடையை சரியாக வைத்திருக்க:

எடையை சரியாக வைத்திருக்க

இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடியோ கேம்ஸ்இல் அடிமையாகிவிடுகின்றனர். இதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு சென்று விளையாடுவதே இல்லை. இது அவர்களுக்கு உடல் கொழுப்புகளை அதிகரிக்கிறது. நம் இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்று நண்பர்களுடன் சேர்ந்து விளையாடினாள் நமக்கு உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கும். மேலும் நாம் ஆரோக்கியமாகவும் இருப்போம்.ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஆவது விளையாட வேண்டும். இது உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு உதவுகிறது, அதனால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனையும் வராது.

இரத்த ஓட்டம் மேம்பட:

நாம் ஓடி ஆடி விளையாடும் போது நமக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நம் விளையாடும் போது நம் இதயம் வேகமாக பம்ப் செய்யும், இது இதய தசைகளில் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது நம் உடலில் இதய தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

உயர் இரத்த அழுத்தம்:

உயர் இரத்த அழுத்தம்

இன்றைய காலத்தில் யாரும் பெரிதாக வெளியிடங்களுக்கு சென்று விளையாடுவது இல்லை இது அவர்களுக்கு மிகவும் மன அழுத்தத்தை தருகிறது. மன  அழுத்தம் மற்றும் முறைகேடான உணவு முறையால் இரத்த அழுத்த பிரசனாய் ஏற்படுகிறது. இதுவே நீங்கள் தினமும் விளையாடினால் உங்கள் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மன அழுத்தம் ஏற்படாது. இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

நாம் தினமும் விளையாடினால் நம் உடலில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு வெள்ளை அணுக்கள் தான் முக்கியம். வெள்ளை அணுக்கள் தன நம் உடலில் நோய்கள் வராமல் பாதுகாக்கின்றன.

தசைகள் பலபட:

கால்பந்து, டென்னிஸ், பேஸ்பால் போன்ற விளையாட்டுகள் விளையாடுவதன் மூலம் தசைகள் பலமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.

மேலும் எலும்புகளுக்கும் அழுத்த கொடுக்கிறது, இதனால் எலும்புகளை பலமாக வைத்திருக்க உதவுகிறது.

மனநல நன்மைகள்:

மனநல நன்மைகள்

வேலை மற்றும் வீட்டில் இருக்கும் டென்சன் காரணமாக பெரும்பாலானவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். அதனால் நீங்கள் தினமும் 20 நிமிடம் விளையாடுவது மன அழுத்தத்தை குறைக்கும்.

மனசோர்வு மற்றும் உடல்சோர்வு ஏற்படாமல் உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

மேலும் உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டால் விளையாடுவதனால் நன்றாக தூங்குவீர்கள்.

நீங்கள் விளையாடுவதால் உடலாலும், மனதாலும் தன்னம்பிக்கை அடைவீர்கள்.

புட்பால் விளையாட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports

 

 

Advertisement