கால்பந்து விளையாட்டு விதிமுறைகள் | Football Rules in Tamil | Football Details in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கால்பந்து விளையாட்டின் விதிமுறைகள் பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. நம் அனைவருக்குமே புட்பால் விளையாட்டு பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் கால்பந்து விளையாட்டின் விதிமுறைகள் பற்றி தெரிந்திருக்காது. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
கால்பந்தாட்டம் விளையாட்டு என்பது பந்துகளை காலால் உதைத்து விளையாடுவது. இந்த விளையாட்டு உலகின் பழமையான விளையாட்டு ஆகும். கால்பந்து விளையாட்டை சில பகுதிகளில் சாக்கர் என்றும் அழைக்கின்றனர். பொதுவாக விளையாட்டுகள் அனைத்திற்கும் விதிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் புட்பால் விளையாட்டின் விதிகள் மற்றும் விதிமுறைகள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
Football Rules and Regulations in Tamil:
புட்பால் மைதானம்:
விளையாட்டு மைதானம் செவ்வக வடிவில் இருக்கும் வேண்டும். அதாவது 90-120 மீட்டர் நீளமும், 45-90 மீட்டர் அகலமும் இருக்க வேண்டும்.
புட்பால் எத்தனை வீரர்கள்:
இந்த விளையாட்டில் 11 வீரர்கள் கொண்டு இரு அணிகளாக பிரிக்கப்படுகின்றன.
வீரர்கள் அணிந்திருக்க வேண்டிய உபகரணங்கள்:
இந்த விளையாட்டில் விளையாடும் அனைத்து வீரர்களும் சட்டை, சாக்ஸ், ஷின் பேட்ஸ் , ஷின் கார்டுகள், கால்பந்து பூட்ஸ் போன்றவை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கோல் கீப்பர்கள் கையுறைகள் அணிந்திருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ கபடி விளையாட்டின் விதிமுறைகள்
போட்டியின் நேரம்:
இந்த விளையாட்டு இரண்டு ஆட்டம் நடைபெறும். அதில் ஒவ்வொரு ஆட்டமும் 45 நிமிடங்கள் விளையாடப்படும். வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் கூடுதல் நேரம் தரப்படும்.
நடுவர்கள்:
ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு நடுவர், இரண்டு உதவி நடுவர்கள் இருப்பார்கள். நடுவர் ஆட்டத்தின் முடிவை பற்றி எந்த நேரத்திலும் உதவி நடுவர்களிடம் ஆலோசனை செய்யலாம்.
விளையாட்டு எப்படி ஆரம்பிப்பது:
போட்டியின் தலைவர்களால் நாணயத்தை சுத்தி விடுவார்கள். அதில் எந்த அணி முதலில் விளையாட வேண்டுமோ அந்த அணி மைய வட்டடத்திலுருந்து ஆரம்பிப்பார்கள்.
வெற்றி எப்படி.?
பந்தானது கோல் கம்பங்களுக்கு இடையே அல்லது கோல் கோட்டை முழுவதும் கடந்து விட்டால் ஒரு கோல் தரப்படும். எந்த அணிகள் அதிக கோல்களை பெற்றுள்ளோதோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது. ஒரு வேலை இரண்டு அணிகளும் ஒரே எண்ணிக்கையில் கோல் அடித்திருந்தாலும் சரி, கோலே அடிக்கவில்லை என்றாலும் சரி போட்டி ட்ராவில் முடியும்.
போட்டியில் வீரர்கள் செய்ய கூடாதவை:
வீரர்கள் எதிரணியின் வீரர்களை காலால் உதைத்தால், அடித்தல், துப்புதல் போன்ற எந்த செயல்களையும் செய்ய கூடாது. அப்படி தவறு செய்தால் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டை வழங்ப்படும்.
இதையும் படியுங்கள் ⇒ சதுரங்க விளையாட்டின் விதிமுறைகள் தெரியுமா..?
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |