தோனி இன்னும் 2 IPL சீசன்களில் விளையாடலாம்: உடைத்து சொன்ன தீபக் சஹார்

Advertisement

ஐபிஎல் தொடர்; தோனி இன்னும் 2 அல்லது 3 சீசன்கள் விளையாடலாம் – சிஎஸ்கே வீரர்

இந்திய கிரிக்கெட்டின் கடிவாளத்தை எப்போதும் இறுக்கமாக பிடித்து வாழ்நாள் முழுவதும் செலவழித்த வீரத்தின் பதக்கங்கள், கஷ்டம் வந்தாலும் விடாமல் இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டவர் தோனி. மகேந்திர சிங் தோனியை பற்றி நிறைய விஷயங்களை சொல்லலாம்.. இலங்கையுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது கேரியர் 2 டிசம்பர் 2005 அன்று அறிமுகமானது. தோனிக்கு மோட்டார் பைக்குகள் மற்றும் விண்டேஜ் கார்கள் மிகவும் பிடிக்கும். உலகின் டாப் 10 விக்கெட் கீப்பர்களில் மகேந்திர சிங் இடம் பெற்றவர். ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையை தோனி பெற்றுள்ளார். தோனி 2001-யில் காரக்பூர் ரயில் நிலையத்தில் TTE ஆக பணிபுரிந்தார். இவர் இந்திய ராணுவ வீரரும் கூட. இவர் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகளை வென்றுள்ளார்.

சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டன் தோனி கடந்த ஆண்டு IPL தொடருக்கு பிறகு தோனி முழங்கால் சிகிசையை மேற்கொண்டார். இதனால் சென்னை சூப்பர் கிங் அணியின் ரசிகர்களுக்கு தோனி இனி வரும் சீசன்களில் விளையாடுவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே வீரர் அறிவித்த ஒரு செய்தியை பற்றி இப்பொழுது நாம் தெரிந்துகொள்வோம் வாங்க..

மகேந்திர சிங் தோனி இன்னும் 2 அல்லது 3 ஐபிஎல் சீசன்களில் விளையாடலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

கடந்த சீசன் கோப்பையை வென்ற தோனி, உடல்நிலை ஒத்துழைத்தால் அடுத்தாண்டும் சென்னை அணிக்காக விளையாடுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தோனி மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் தோனியை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தோனி முழங்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், இன்னும் 2 அல்லது 3 சீசன்களில் அவர் விளையாடலாம் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

“தனது கடைசி ஆட்டத்தை சென்னையில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்வார். அவர் இல்லாமல் சென்னை அணிக்காக விளையாடுவது மிகவும் கடினம். அனைவரும் தோனி இருக்கும் சிஎஸ்கே அணியைதான் பார்த்திருக்கிறார்கள்.

தோனியுடன் நெருங்கிப் பழக 2-3 ஆண்டுகள் ஆனது, நான் அவரை எனது மூத்த சகோதரராக பார்க்கிறேன், அவரும் என்னை ஒரு தம்பியாக பார்ப்பதாக நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
IPL 2024 அட்டவணை – அணி, வீரர்கள் பட்டியல், இடம், நேர அட்டவணை..!

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement