சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி கட்டுரை

Advertisement

Sitrilakiyam Thotramum Valarchiyum in Tamil

இலக்கியங்களில் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரண்டு வகைகள் உள்ளன. நாம் இந்த பதிவில் சிற்றிலக்கியம் பற்றி பார்க்கலாம். நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு சிறப்புகளையும், ஒவ்வொரு கருத்துக்களையும் பெற்றுள்ளன. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம் ஆகும். இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் ஆகும். சிற்றிலக்கியங்களை முதலில் பிரபந்தங்கள் என்று வழங்கினர். இந்த பதிவில் சிற்றிலிக்கியத்தின் தோற்றமும், வளர்ச்சியும் குறித்த கட்டுரையை பற்றி காண்போம்.

முன்னுரை:

தமிழ் மொழியில் இலக்கியங்களில் ஒன்றாக இருப்பது தான் சிற்றிலிக்கியம். இதனுடைய வளர்ச்சியானது சங்க காலத்தில் இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியம். பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம், பத்தி பாடல்கள், இசை நாடகம் இலக்கியம் போன்றவற்றில் இடம் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட சிற்றிலிக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து இந்த பதிவின் வாயிலாக காண்போம்.

சிற்றிலிக்கியம்:

குறைந்த எண்ணிக்கையில் அமைந்த பாடல்களை கொண்டதை சிற்றிலிக்கியம் என்பார்கள். சிற்றிலிக்கியத்தை வடமொழியில் பிரபந்தம் என்று அழைப்பார்கள். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கில், ஏதேனும் ஒன்றைக் கூறும். இவை தலைவனின் ஒரு பகுதியை மட்டும் கூற கூடியதாக இருக்கும். பாடல்களின் எண்ணிக்கை அல்லது அடிகளானது குறைவாக காணப்படும். பிரபந்தம் என்பதை தமிழ்ழில் யாப்போடு ஒப்பிடலாம். இரண்டுமே கட்டுதல் என்ற பொருளை உணர்த்துகிறது.

காலம்:

சங்க காலத்தில் சிற்றிலிக்கியம் தோற்றம் பெற்றாலும், சிற்றிலிக்கியம் உச்ச நிலையில் இருந்த காலத்தை நம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். இடைக்கால சோழர்கள் பல்லவர்கள் காலத்தை காப்பியம் காலம் என்று கூறுகிறார்கள். அது போல நாயக்கர் காலத்தை சிற்றிலிக்கியம் காலம் என்கிறோம். சங்க காலத்திலேயே சிற்றிலக்கியம் தோன்றிவிட்டது எனலாம். சங்க இலக்கியத்தை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பிரிப்பர். இவற்றுள், பத்துப்பாட்டில் 10 நூல்கள் உள்ளன. அவற்றுள் 5 நூல்கள் ஆற்றுப்படை என்ற சிற்றிலக்கிய வகை ஆகும். திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்பவையாகும். இது படி பார்த்தால் கிபி 15, 16, 17-ம் நூற்றாண்டையே சிற்றிலிக்கியம் காலம் என்று கூறலாம்.

அமைப்பு:

சிற்றிலிக்கியங்கள் பல்துறை சார்ந்த பெரிய நூல்கள் போல இல்லாமல் ஒரு சில துறைகளை பற்றி மட்டும்ஆழமாக உணர்த்துகிறது. அறம். பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களில் ஒன்றை மட்டும் ஒன்றை மட்டும் தருவது சிற்றிலிக்கியம் என்று கூறலாம். இவை பாட்டுடை தலைவன், மன்னன், வள்ளல் போன்றோரை சிறப்பித்து கூறும். எடுத்துக்காட்டாக உலா-இதில் லைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்பட்டிருக்கும்.

முடிவுரை:

சிற்றிலக்கியத்தின் மூலம் தமிழருடைய பண்பாட்டினை அறிய முடிகிறது. கற்பனை ஆற்றலை பெருக்குவதற்கு சிற்றிலிக்கியம் உதவி புரிகிறது. இவை அளவில் சிறியதாக இருந்தாலும் பெரும் சுவையை தருவதாக சிற்றிலிக்கியத்தின் ம் அமைகின்றது. மன்னர்களின் சமூக வாழ்வியலை அறிந்து கொள்வதற்கு பேருதவி புரிகிறது. ஊரினையுடைய வரலாறு, புராண கதைகள், மக்களின் வழிபாட்டு முறை போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai

 

Advertisement