பெங்களூரில் குறைந்த பொருட்களை வாங்குவதற்கு இந்த ஸ்ட்ரீட்டில் போய் வாங்குங்க

Advertisement

Cheap Street Shopping in Bangalore

பொதுவாக நாம் பொருட்கள் அல்லது துணிகள் வாங்க சென்றால் உடனே வாங்கி விட மாட்டோம். ஒரு கடைக்கு 3 அல்லது 4 கடைக்கு சென்று தான் வாங்குவோம். நமக்கு பிடித்த மாதிரியும் வாங்குவோம், முக்கியமாக குறைந்த விலையில் உள்ள கடையில் பொருட்களை வாங்குவோம்.

அது போல காய்கறி வாங்க வேண்டுமென்றால் சந்தையில் சென்று வாங்குவோம், ஏனென்றால் சந்தையில் பொருட்கள் விலையானது குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக சென்னையில் தி நகருக்கு சென்றால் விலை குறைவாக ஆடைகளை வாங்கி வரலாம் என்று அனைவருக்கும் தெரிந்தது. அந்த வகையில் பெங்களூரில் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்கான இடங்களை பார்ப்போம்.

சிவாஜி நகர்:

shivaji nagar bangalore

பெங்களூரில் உள்ள சிவாஜி நகரில் குறைந்த விலையில் கையால் செய்யப்பட்டால் வீடு அலங்கார பொருட்களை வாங்கலாம்.

இடம்: சிவாஜி நகர் பெங்களூர்

நேரம்: காலை 7 மணி முதல் இரவு 11 வரை

⇒  என்னென்ன வாங்கலாம்: மரச்சாமான்கள், வீடு உபயோக பொருட்கள், செப்பல், பழங்காலத்து பொருட்கள் போன்றவை வாங்கலாம்.

Chickpet Bangalore:

chickpet bangalore

இந்த தெருவானது 400 ஆண்டுகள் பழமையான ஒன்றாக இருக்கிறது, இதில் புடவைகள் விஷேச நாட்களுக்கு ஆடைகளை வாங்குவதற்கு ஏற்ற ஏரியாவாக இருக்கிறது.

⇒  நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை

⇒  என்னென்ன பொருட்கள் வாங்கலாம்: புடவைகள், விஷேச ஆடைகள்

2 நாட்கள் பெங்களூரில் எந்தெந்த இடத்தை சுற்றி பார்க்கலாம்

Jayanagar 4th Block bangalore:

jayanagar 4th block bangalore

உங்களுடைய பணத்தை சேமித்து ஆசைப்பட்ட ஆடைகளை வாங்க விரும்பினால் ஜெயநகர் 4th பிளாக்கிற்கு செல்ல்லுங்கள். இதில் பல விதமான ஆடைகள், ஸ்டைலான ஆடைகள், செப்பல் போன்றவை வாங்கலாம்.

⇒  நேரம்: காலை 10 மணி முதல் மத்திய 1 மணி வரை அதன் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

⇒  என்னென்ன பொருட்கள் வாங்கலாம்: ட்ரெஸ் மற்றும் செப்பல்

Malleshwaram Bangalore:

மலேஸ்வரம் ஏரிவானது பூக்களை வாங்குவதற்கு உகந்த ஏரியாவாக இருக்கிறது.

⇒  இடம்: சம்பிக சாலை, மல்லேஸ்வரம் மேற்கு, பெங்களூர்

⇒  நேரம்: காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை

⇒  என்னென்ன  வாங்கலாம்: பூக்கள்

Commercial Street Bangalore:

commercial street bangalore

கமர்ஷியல் தெருவானது எம்ப்ராய்டரி  செய்யப்பட்ட மணப்பெண் பிளவுஸ், கவுன்கள், உடைகள் போன்றவை வாங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது.

⇒  இடம்: டாஷ்கர் டவுன், சிவாஜி நகர், பெங்களூர்

⇒  நேரம்: காலை 10.30 மணி முதல் இரவு 08 மணி வரை

⇒  என்னென்ன வாங்கலாம்: எம்ராய்டரி செய்யப்பட்ட ஆடை, நகை

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel 

 

 

Advertisement