வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒகேனக்கல்லில் சுற்றி பார்க்க வேண்டிய 5 குளிர்ச்சியான இடங்கள்

Updated On: April 1, 2024 6:38 PM
Follow Us:
hogenakkal in tamil
---Advertisement---
Advertisement

Hogenakkal Tourist Places In Tamil

கோடை காலம் வந்து விட்டாலே எங்காவது குளிர்ச்சியான இடத்துக்கு சென்று சுற்றி பார்க்க தோன்றும். பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கும் கோடை காலத்தில் விடுமுறை விட்டுவிடுவார்கள். அப்படி அந்த விடுமுறை நாட்களை பிரோயஜனமாக நிறைய சுற்று தலங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பீர்கள். அதற்கு ஒகேனக்கல் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது ஒரு மலை மற்றும் நீர்வீழ்ச்சி சூழ்ந்த இடமாக இருப்பதால் கோடை நாட்களுக்கு இது ஒரு குளிர்ச்சியான அனுபவத்தை தரும். சரி ஒக்கனேக்கலில் சுற்றி பார்க்க 5 இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

1.கோரக்கிள் சவாரி 

இந்த கோரக்கிள் சவாரி என்பது ஓக்கேன்னக்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். பெரிய நீர்வீழ்ச்சி பாறையின்  இருபக்கமும் நடுவில் ஓடும் நதியில் மூங்கில்களால் செய்யப்பட்ட படகுகளில் செய்யும் சவாரியாகும். இதன் மூலம் நீங்கள் வித்தியாசமான பறவைகள், அழகான நீர்வீழ்ச்சிகள், மலை பாறைகள், ஆகியவற்றை நதியில் சவாரி செய்து கொண்டே பார்த்து ரசிக்கலாம். இது உங்களுக்கு சிறந்த சுற்றுலா தளத்திற்கான அனுபவத்தை தரும்.

2.ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

hogenakkal waterfalls in tamil

மலைகளிலிருந்து வரும் நீர்வீழ்ச்சியை தொங்கு பாலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்க்கலாம். கோரக்கில் சவாரி செய்யாமலையே நீர்வீழ்ச்சி அருவிகளை பார்த்து ரசிக்கலாம். காவேரி நதியின் நீர்மட்டம் உயரும் போதெல்லாம் நீர்வீழ்ச்சி பெரியளவில் தெரியும். அதனால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி இந்திய நயாகரா என்று அழைக்கப்படுகிறது.

3. முதலை பூங்கா

hogenakkal crocodile park in tamil ஒக்கேனக்கலில் முதலை பூங்கா ஒன்று உள்ளது. இந்த முதலையை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் இதனை அதன் வடிவமைப்பு போன்றவற்றை பக்கத்தில் இருந்து பார்க்கலாம். அதனால் இந்த இடத்தை சுற்றி பாருங்கள்.

4. மேட்டூர் அணை 

mettur anai in tamil

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நதியின் பாதை காவேரி ஆற்றின் நடுவில் மேட்டூர் அணைக்கு செல்கிறது. ஒக்கேனக்கல்லிலிருந்து மேட்டூர் அணைக்கு போக 2 மணி நேரம் ஆகிறது. 12 மாவட்டங்களுக்கும் அதிகமாக குடிநீரை மேட்டூர் அணை வழங்குகிறது. மேட்டூர் அணையில் எல்லிஸ் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்றும் நீங்கள் நேரத்தை போக்கலாம்.

5. மேலகிரி மலைகள் 

கிழக்கு தொடர்ச்சி மலை தொடரில் ஒன்றான மேலகிரி மலைகள் ஒக்கேனக்கலுக்கு கொஞ்ச தூரம் அமைந்துள்ளது.  இங்கு வனவிலங்கு சரணாலயம் ஒன்று இருக்கிறது அந்த சரணாலயத்தில் சிறுத்தைகள், யானைகள், முதலைகள் காணப்படுகின்றன. இந்த மேலகிரி மலைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளிக்கும்.

ஒக்கேனக்கல்லில் நீங்கள் சுற்றிபார்ப்பதற்கான குளிர்ச்சியான 5 இடங்கள் கூறப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சிகள், கிழக்கு தொடர்ச்சி மலைகள், பூங்காக்கள் உங்கள் சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்தும்.  நிச்சயமாக கோடை விடுமுறையை நீங்கள் இங்கு சென்று உங்கள் பொழுதை கழிக்கலாம்.

சுற்றி பார்க்க எங்க போறீங்களா இல்லையா..! ஏற்காட்டை பார்த்திடுங்கள்..!

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide

 

Advertisement

Indhu Mathi

நான் இந்துமதி பொதுநலம் வலைத்தளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். ஆரோக்கியம் ,அழகு குறிப்பு மற்றும் சமையல் குறிப்பு போன்றவற்றின் தகவல்களை உங்களுக்கு சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now