சென்னையிலிருந்து பார்க்க வேண்டிய மூன்று இடங்கள்
இரண்டு நாட்கள் தொடர்ந்து லீவ் வந்தால் அந்த லீவை வீட்டிலேயே கழிக்க விரும்ப மாட்டார்கள். குடும்பத்தோடு வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்றால் இரண்டு நாட்களில் என்ன ஊருக்கு செல்வது என்ற குழப்பம் இருக்கும்.
அதுமட்டுமில்லமால் இரண்டு இடங்களை பார்த்தாலும் சுற்றி பார்க்கின்ற அளவிற்கு இருக்க வேண்டும் என்று நினைப்போம். அதனால் நீங்கள் எந்த இடத்திற்கு செல்வது என்று தேடி கொண்டிருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க என்னென்ன இடம் என்று அறிந்து கொள்வோம்.
ஏலகிரி:
நீங்கள் சென்னையிலிருந்து காலையில் 6 மணிக்கு புறப்படுகிறீர்கள். ஏலகிரியானது மலைகள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. முதல் நாள் புங்கனூர் ஏரி, வேலவன் கோவில், நிலவூர் ஏரி, இயற்கை பூங்கா (Nature park) ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.
இரண்டாவது நாள் காலையில் ஜலகம் பாறை அருவி சுற்றி பார்த்து விட்டு ஹோட்டலில் சென்று சாப்பிட்டு விட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து விடலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா..?
மகாபலிபுரம்:
மகாபலிபுரம் என்பது கோவில்கள் நிறைந்த இடமாக இருக்கிறது. அதனால் இந்த இடத்தில் 2 நாட்களுக்கு சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது.
அதில் முதல் நாள் நீங்கள் காலை 7 மணிக்கு புறப்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள காமாக்ஷி அம்மன் கோவில், ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், வரதராஜ் ஸ்வாமி கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் போன்ற தலங்களுக்கு செல்லலாம். காஞ்சிபுரத்திலேயே இரவு தங்க வேண்டும்.
இரண்டாவது நாள் காலை 9 மணிக்கு புறப்பட்டு கடற்கரை கோவில், சிற்பம் அருங்காட்சியகம், அர்ஜுனாஸ் பெனன்ஸ், குகை கோவில்கள், பஞ்ச ரதாஸ், கனேஷன் ரதா, கிருஷ்ணன் பட்டர்பால், மகாபல்லிபுரம் கடற்கரை போன்ற இடங்களை சுற்றி பார்த்து விட்டு அன்று இரவு 9 மணிக்கெல்லாம் நீங்கள் வீட்டிற்கு சென்று விடலாம்.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் பெயர்கள்..!
பாண்டிச்சேரி:
நீங்கள் சென்னையிலுருந்து 6 மணிக்கு பாண்டிச்சேரி செல்கிறீர்கள். அன்று கடற்கரை, சிற்பக்கலை அருங்காட்சியகம், மண்டபங்கள், குகைகள் போன்ற இடத்தை சுற்றி பார்க்கலாம். பாண்டிச்சேரியிலே இரவு தங்கி விட வேண்டும்.
அடுத்த நாள் காலையில் 8 மணிக்கு ஆரம்பித்தீர்கள் என்றால் வினாயகர் கோவில், ஸ்ரீ அரபிந்தோ ஆசிரமம், பாரதி பூங்கா, மகாத்மா காந்தி சிலை, பாண்டிச்சேரி கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்லலாம். நீங்கள் இந்த இடங்களை சுற்றி பார்த்து விட்டு இரவு 10 மணிக்கெல்லாம் வீட்டிற்கு சென்று விடலாம்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel |