Mayiladuthurai District Tourist Places in Tamil
ஒரு சிலருக்கு சுற்றுலா செல்வது என்பது மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மாவட்டத்தில் உள்ள அருமையான சுற்றுலா தலங்கள் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அழகான மற்றும் அருமையன சுற்றுலா தலங்கள் பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அடுத்த முறை நீங்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்றால் இந்த பதிவில் கூறியுள்ள சுற்றுலா தலங்களுக்கெல்லாம் சென்று வாருங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 குற்றாலத்தை தவிர தென்காசியில் சுற்றி பார்க்க இவ்வளவு அருமையான சுற்றுலா தலங்கள் உள்ளதா இது தெரியாம போச்சே
Mayiladuthurai Tourist Places in Tamil:
தமிழ் நாட்டின் 38-வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 2020- ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சோழர்களின் முக்கிய கடற்படை தலமாக இருந்த பூம்புகார் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது.
இதுபோல் பல சிறப்புகளை தனக்குள் கொண்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அழகான சுற்றுலா தலங்களை பற்றி விரிவாக காணலாம்.
1. தரங்கம்பாடி கடற்கரை:
நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் தரங்கம்பாடி கடற்கரை தான். இந்த கடற்கரை மயிலாடுதுறையில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தரங்கம்பாடியில் உள்ளது.
இந்த கடற்கரை மயிலாடுதுறையின் மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலம் ஆகும். அதனால் அடுத்த முறை நீங்கள் மயிலாடுதுறைக்கு சென்றால் கண்டிப்பாக இந்த தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்று சுற்றி பாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண் கவரும் சுற்றுலா தலங்கள்
2. டேனிஷ் கோட்டை:
நாம் இரண்டாவதாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் டேனிஷ் கோட்டை தான். இந்த கோட்டை தரங்கம்பாடி கடற்கரையிலேயே அமைந்துள்ளது. இது டேனிஸ்காரர்களின் இரண்டாவது பெரிய கோட்டையாக உள்ளது.
இது தற்போது அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகின்றது. இந்த கோட்டையும் மயிலாடுதுறையின் மிகவும் முக்கியமான சுற்றுலா தலம் ஆகும். அதனால் அடுத்த முறை நீங்கள் மயிலாடுதுறைக்கு சென்றால் கண்டிப்பாக இந்த டேனிஷ் கோட்டைக்கு சென்று வாருங்கள்.
3. தில்லையாடி வள்ளியம்மை மணி மண்டபம்:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் தில்லையாடி வள்ளியம்மை மணி மண்டபம் தான். இது மயிலாடுதுறையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தில்லையாடியில் உள்ளது.
இந்திய சுதந்திர போராட்ட வீரரான தில்லையாடி வள்ளியம்மையின் நினைவாக அவர் பிறந்த ஊரான தில்லையாடியில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதுவும் மயிலாடுதுறையின் முக்கியமான சுற்றுலா தலம் ஆகும். அதனால் அடுத்த முறை நீங்கள் மயிலாடுதுறைக்கு சென்றால் கண்டிப்பாக இந்த தில்லையாடி வள்ளியம்மை மணி மண்டபத்திற்கு சென்று சுற்றி பாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஊட்டியை தவிர நீலகிரி மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா
4. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்:
நாம் அடுத்து பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தான். இந்த கோவில் மயிலாடுதுறையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கடையூரில் உள்ளது.
இந்த கோவில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும். இன்னும் பல சிறப்புகளை கொண்டுள்ள இந்த கோவிலுக்கு அடுத்த முறை நீங்கள் மயிலாடுதுறைக்கு சென்றால் கண்டிப்பாக சென்று வாருங்கள்.
5. பூம்புகார் கடற்கரை:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் பூம்புகார் கடற்கரை ஆகும். இந்த தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ள பூம்புகார் கடற்கரை மயிலாடுதுறையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூம்புகாரில் அமைந்துள்ளது.
பண்டைய கால சோழர்களின் மிகவும் முக்கியமான துறைமுகமான பூம்புகார் மிகவும் பழமையான கடற்கரை ஆகும். மேலும் இந்த கடற்கரை மயிலாடுதுறையின் மிக முக்கியமான சுற்றுலா தலம் ஆகும்.
அதனால் அடுத்த முறை நீங்கள் மயிலாடுதுறைக்கு சென்றால் கண்டிப்பாக இந்த பூம்புகார் கடற்கரைக்கு சென்று சுற்றி பாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> திண்டுக்கல் மாவட்டத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா
6. பழையார் கடற்கரை:
நாம் இறுதியாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் பழையார் கடற்கரை ஆகும். இந்த கடற்கரை சீர்காழியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தான் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கின்றது.
இந்த பகுதி முழுவதும் மங்கிரோ மரங்களால் சூழப்பட்டுள்ளதால் இது மிகவும் அழகான சுற்றுலா தலமாக உள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் மயிலாடுதுறைக்கு சென்றால் கண்டிப்பாக இந்த பழையார் கடற்கரைக்கு சென்று வாருங்கள்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |