Dindigul District Tourist Places in Tamil
நம்மில் பலருக்கும் பல இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும். ஆனால் எங்கு சுற்றுலா செல்வது என்பது தான் ஒரே குழப்பமாக இருக்கும். அப்படி உங்களுக்கும் குழப்பமாக உள்ளதா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.
அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா தலங்களுக்கெல்லாம் அடுத்த முறை நீங்கள் திண்டுக்கல் சென்றால் கண்டிப்பாக சென்று வாருங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
Dindigul District Tourist Places in Tamil:
தமிழகத்தின் மிகவும் அழகான மாவட்டங்களுள் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி 1985- ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.
திண்டுக்கல் என்றாலே நாம் அனைவரின் நினைவிருக்கும் நினைவிற்கு வருவது பூட்டு தான். ஆனால் இங்கு பூட்டினை தவிர வேறு சில சிறப்புகளும் உள்ளன. இப்படி பல சிறப்புகளை தனக்குள் கொண்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி விரிவாக காணலாம்.
1. பழனி முருகன் கோவில்:
நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் நாம் அனைவரும் அறிந்த பழனி முருகன் கோவில் தான். இது திண்டுக்கல்லில் இருந்து 57 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழனி மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் மிகவும் புகப்பெற்ற மற்றும் அதிக மக்கள் வரக்கூடிய கோவில்களில் இதுவும் ஒன்று. மேலும் இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. அதனால் நீங்கள் திண்டுக்கல்லுக்கு சென்றால் கண்டிப்பாக இந்த பழனி முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
2. கொடைக்கானல்:
நாம் இரண்டாவதாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் கொடைக்கானல் தான். மலைகளின் அரசி என்னும் கொடைக்கானல் திண்டுக்கல்லில் இருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது.
இதையும் படித்துப்பாருங்கள்=>தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் ..!
இங்கு பல சுற்றுலா தலங்கள் உள்ளது. அதனால் இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத்த முறை நீங்கள் திண்டுக்கல்லுக்கு சென்றால் நீங்களும் இந்த கொடைக்கானலுக்கு உங்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கண்டிப்பாக சென்று வாருங்கள்.
3. மன்னவனூர்:
நாம் அடுத்து பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் மன்னவனூர் தான். இது கொடைக்கானலில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமம் ஆகும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்..!
இது மிகவும் பசுமையாக காட்சி அளிக்கிறது. அதனால் இங்கு பல பசுமையை விரும்பக்கூடிய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத்த முறை நீங்கள் திண்டுக்கல்லுக்கு சென்றால் இந்த மன்னவனூருக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
4. கூக்கல் (Kookal):
நாம் அடுத்து பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் கூக்கல் தான். இது கொடைக்கானலில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு மிகவும் பசுமையான மற்றும் அமைதியான சூழலால் நிலவும்.
அதனால் இங்கு பல பசுமை மற்றும் அமைதியான சூழலை விரும்பக்கூடிய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத்த முறை நீங்கள் திண்டுக்கல்லுக்கு சென்றால் இந்த கூக்கலுக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
5. திண்டுக்கல் மலைக்கோட்டை:
நாம் அடுத்து பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் திண்டுக்கல் மலைக்கோட்டை தான். இது திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் முத்து கிருஷ்ணப்பர் நாயக்கரால் இந்த கோட்டை கட்டப்பட்டது.
திண்டுக்கலின் முக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று. அதனால் இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத்த முறை நீங்கள் திண்டுக்கல்லுக்கு சென்றால் இந்த திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
6. சிறுமலை:
நாம் இறுதியாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் சிறுமலை தான். இது திண்டுக்கல்லில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலைப்பகுதி ஆகும்.
இதையும் படியுங்கள்=> இயற்கையின் மிகவும் அழகான மற்றும் அதிசயமான 7 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இது கொடைக்கானல் மலையை காட்டிலும் அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. மேலும் இது கடல் மட்டத்தில் இருந்து 5200 அடி உயரத்தில் அமைந்துள்ளதால், இங்கு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான சூழலே நிலவுகின்றது.
அதனால் இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத்தமுறை நீங்கள் திண்டுக்கல்லுக்கு சென்றால் இந்த சிறுமலைக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |